பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவுச்செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழலில் மத்திய உள்துறை அமைச்சகம் காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகார்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவுச்செய்வதை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளது.
ருச்சிகா கிர்ஹோத்ரா பாலியல் பலாத்கார வழக்கில் காவல்துறை, முன்னாள் ஹரியான உயர் போலீஸ் அதிகாரி ரத்தோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவுச்செய்ய மறுத்துள்ள செய்தி வெளிவந்ததையடுத்தே இந்நடவடிக்கையென அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய உளவுத்துறையான ஐ.பி யின் 22-வது நூற்றாண்டு அறக்கொடை உரை நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் காவல்நிலையத்தில் பதிவுச்செய்யப்படும் வழக்கையே முதல் தகவல் அறிக்கையாக எடுத்துக்கொள்ளலாம் எனவும் இல்லாவிட்டால் காவல்துறைப்பற்றி தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்திவிடும் என தெரிவித்தார்.
ருச்சிகாவின் குடும்பத்தினர் இது பற்றித்தெரிவிக்கையில் 1990 ஆம் ஆண்டு ரத்தோருக்கு எதிராக வழக்கு பதிவுச்செய்ய காவல் நிலையம் சென்றபொழுது காவல்துறையினர் துவக்கத்திலேயே முதல் தகவல் அறிக்கையை பதிவுச்செய்ய மறுத்துவிட்டனர். பின்னர் ருச்சிகாவின் சகோதரர் மீது ஆட்டோவை திருடியதாக பொய் வழக்கு பதிவுச்செய்து தொந்தரவுக்கு ஆளாக்கினர்.மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவுச்செய்யவும் மறுத்துவிட்டனர்.
காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகார்களுக்கு வழக்கு பதிவுச்செய்யாவிட்டால் அதற்கான விளக்கத்தை காவல்நிலையத்தின் பொறுப்பான அதிகாரி அளிக்கவேண்டும் என்பதான சட்டதிருத்தத்தை எதிர்காலத்தில் இந்திய குற்றவியல் சட்டத்தில் கொண்டுவர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
AdiraiPost
இந்தியா
போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் எல்லா புகார்கள் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சகம்
PUTHIYATHENRAL
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்