உலமாக்கள் வாரிய அடையாள அட்டை:தஞ்சை கலெக்டர் சண்முகம்

தஞ்சை : கலெக்டர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் முன்னேற்றத்திற்காக தனியாக வாரி யம் அமைத்து முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
இவ்வாரியத்தில் 18 வயது முதல் 60 வயது க்கு உட் பட்ட பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணியாற்றும் ஆலிம்கள், பேஷ்இமாம் கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மோதினார் கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங் கள், தைக்காக்கள், ஆஷிர் கானாக்கள் மற்றும் முஸ் லீம் அனாதை இல்லங்கள் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராகத் தகுதியானவர்கள்.
இந்நலவாரியத்தில் உறுப்பினராகச் சேர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி விண்ணப்பம் பெற்றுக்கொ ள்ளலாம். தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 279 பேருக்கு உலமாக்கள் நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றார்.
Unknown

Unknown

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.