கட்சிக்கும் பாஜக ஆட்சி நடக்கும் அரசுகளுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படையாகக் கூற வேண்டாம் என்று பாஜக கேட்டுக் கொண்டுள்ளது.
கட்சி மற்றும் அரசு குறித்து தங்கள் கருத்துகளை வெளிப்படையாகக் கூறுவதை விட்டும் அனைத்துத் தலைவர்களும் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று கர்நாடக மாநில பாரதீய ஜனதா கட்சித் தலைவர் சதானந்த கெளடா கூறினார்.
கட்சியில் நிலவும் அனைத்துப் பிரச்சனைகளைப் பற்றியும் விவாதிக்க கட்சியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடத்தப்பட்டு அதில் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
வாஜ்பாயிடன் கருத்து வேறுபாடு இருந்ததாக அத்வானி பத்திரிக்கைகளில் வெளிப்படையாக சொன்னதை மனதில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இது அத்வானிக்கு விழுந்த குட்டு.அத்வானியின் அரசியல் அந்திம காலம் தொடங்கிவிட்டதேயே இது காட்டுகிறது.

crown
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்