நேர்மை காரோட்டி

நியூயார்க்: நியூயார்க்கில் டாக்டருக்கு படிக்கும் வங்கதேச மாணவர் முகுல் அஸாதுஸ்ஸமான். இவர் தனது படிப்புச் செலவுக்காக பகுதி நேர டாக்சி டிரைவராக பணியாற்றுகிறார்.

கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது இவரது டாக்சியில் பெலிகா லெட்டரி (72) என்ற இத்தாலிய பாட்டி பயணம் செய்தார். பெலிகா டாக்சியில் தனது பர்சை மறந்து வைத்து விட்டு சென்றுவிட்டார். அதில் ரூ.95,000(13000 இத்தாலியன் லிரா) இருந்தது.

டாக்சியில் பர்ஸ் இருப்பதை பார்த்த அஸாதுஸ்ஸமான், அதில் இருந்த முகவரியில் பர்சை ஒப்படைக்க சென்றார். சுமார் 87 கி.மீ. பயணம் செய்து வீட்டைக் கண்டுபிடித்த முகுல் வீடு பூட்டியிருந்தது கண்டு ஏமாற்றமடைந்தார். எனினும் போன் நம்பரை கதவில் எழுதிவிட்டு நியூயார்க் திரும்பினார்.

சில மணி நேரத்தில் அவரது போனில் பெலிகா தொடர்பு கொண்டார். உடனடியாக, மீண்டும் அவரது வீட்டுக்கு பணத்துடன் விரைந்தார் முகுல். தவற விட்ட பணத்தை 87 கி.மீ. பயணம் செய்து திரும்ப ஒப்படைத்த அஸாதுஸ்ஸமானுக்கு பரிசு அளிக்க விரும்பியும் அதை வாங்க மறுத்தார் அஸாதுஸ்ஸமான்.
உண்மையானமுறையில் வாழ்கைப்பயணம்,இது போல் நேர்மையாளர்களால் நாம் பெருமை கொள்கிறோம்.
crown

crown

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.