
அகில இந்திய ரேடியோ ஸ்தாபனத்திலும் வகுப்புவாதமா?
கண்டனக்கூட்டம்
விடுதலை: 7.1.1939
கோவை, ஜன.4_ 3.1.1939 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை இரவு 9.30 மணிக்கு முஸ்லிம் வாலிப முன்னேற்ற சங்கக் கட்டடத்தில் ஜனாப் கே.எஸ்.முகமது இபுறாகீம் சாயபு அவர்கள் தலைமையின் கீழ் சென்னை ரேடியோ ஸ்தாபனத்தில் நடக்கின்ற வகுப்பு வாதத்தையும், ஒரு வகுப்பாரே அனுபவிக்கும் ஏகபோக உரிமைகளையும் கண்டிக்க ஒரு கூட்டம் நடைபெற்றது. அது சமயம் ஜனாப் எஸ்.எஸ்.யூசுப் அவர்களால் கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதை ஆதரித்து பல நண்பர்கள் பேசினார்கள். கடைசியாக கெ.அப்துல் அஜீஸ் அவர்களால் வந்தனோபசாரம் கூறப்பட்டு கூட்டம் இனிது கலைந்தது-.
பிராமணரல்லாத எல்லா சங்கங்களும் குறிப்பாக முஸ்லிம் சங்கங்களும் கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
-காரியதரிசி
நன்றி விடுதலை
இது பழைய செய்தி!
காலங்கள் கடந்துப்போயின ஆட்சிகளும் ஆள்பவர்களும் மாறினார்கள்.
மடிந்ததா முஸ்லிம்களுக்கெதிரான வகுப்பு வாதம்?
இல்லை என்று யாராவது சொல்லுங்கள்...
நம்ப முயற்சிக்கிறோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்