


என்னை ஏன் கொன்றீர்கள்....?
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கலவரப் பதட்டம் ஒரு புறம் இருந்தாலும்...
மறுபுறம் நெஞ்சை பதைக்க கூடிய ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது.
2-2-2010 காலை 8 மணியளவில் முத்துப்பேட்டை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு ஒரு தகவல் வருகிறது. பழைய பேருந்து நிலையத்திற்கு பின்புறமுள்ள ஆற்றில் பிறந்து சில மணிநேரங்களே ஆன பெண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கண்டுடெடுக்கப்பட்டுள்ளது என்றும் உதவிக்கு வாருங்கள் என்று சொல்லப்படுகிறது. தகவலைப் பெற்றுக்கொண்ட ஐஎன்டிஜே நகரத்தலைவர் நியாஜ்சுர் அஸ்பக் ஆஸம், செயலாளர் பரீஸ்கான், துணைச்செயலாளர், திருவாரூர் மாவட்ட துணை செயலாளர் அலாவுதீன், திருவாரூர் தொண்டரணி செயலாளர் பாட்ஷா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த குழந்தையை பார்வையிட்ட பின் காவல்துறைக்கு தகவல் அனுப்பிகின்றனர். திருவாரூர் மாவட்ட எஸ்.பி. பிரவின்குமார் அபிநவ் அவர்களின் நடவடிக்கையின் பெயரில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வி.ஏ.ஓ. சம்பவ இடத்திற்கு வந்து விசாரனை நடத்தி பிரோத பரிசோதனைக்காக திருத்துரைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்த குழந்தை எந்த மதம் என்று கூட தெரியாத நிலையில் ஒரு வெள்ளை துணியில் சுற்றி ஆம்பலன்ஸ் வரவழைப்பட்டு அதிகாரிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஐஎன்டிஜே நிர்வாகிகள் செய்துகொடுத்தனர். இச் செயலை செய்தது யார் என்று விசாரனை நடைபெற்ற வருகிறது. இவ்வுலகில் இவர்கள் தப்பித்தாலும் மறுமையில் இந்த குழந்தை கொன்றவர்களை நோக்கி “என்னை ஏன் கொன்றீர்கள்...? ” என்று கேட்கும் கேள்விக்கு அவர்களால் பதிலலிக்க முடியாது. அந்த தீர்ப்பு நாளில் அந்த கொலைகாரர்கள் இறைவனிடமிருந்து தப்ப முடியாது.
சீமான், பகுரூதீன் உதவியுடன் எல்சன்
www.muthupet.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்