
சென்னை: பிரபல தமிழக சாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதிலும் உள்ள அவருடைய பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
அந்த வீடியோ காட்சியில் ஆசிரமம் போல் காணப்படும் அங்கு சாமியாரும் நடிகை ரஞ்சிதாவும் ஒரு அறையில் உள்ளனர். அந்த அறையில் புடவையுடன் இருக்கும் நடிகை ரஞ்சிதா சாமியாருடன் நெருக்கமாக படுக்கையில் புரளுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. அதை தொடர்ந்து விளக்குகள் அணைக்கப்படுகின்றன.
இதேபோல் அடுத்தக் காட்சியில் நடிகை ரஞ்சிதா சுடிதாரில், சாமியார் இருக்கும் அறைக்கு வருகிறார். அப்போது ரஞ்சிதா மாத்திரை கொடுக்கிறார், காபி கொடுக்கிறார். பின்னர் பழையபடி விளக்குகள் அணைக்கப்படுகின்றன. இந்தக் வீடியோ காட்சிகளைப் பார்க்கும்போது நடிகைக்கும், சாமியாருக்கும் பல வருடங்களாகவே தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்படுகிறது.
இந்த செய்திகள் அடங்கிய வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து, கடலூர் அருகே வண்டிப்பாளையம் பகுதியில் நித்தியானந்தா சாமியாரின் பக்தர்கள் மற்றும் பொதுமக்களும் இணைந்து அங்கு ஒட்டப்பட்டு இருந்த அவரின் படங்களை கிழித்தெறிந்தனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சாமியாரின் படத்தை கிழித்தவர்கள், நித்யானந்த சாமியாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவரின் ஆசிரமத்துக்கு சீல் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்