தெருவில் ஓதித் திறிந்த அர்ரஹ்மானும்...ஆமீனல்லாவும்...
தராவீஹும்…ஹிசுபும் கொடிமர மைதான கிளித்தட்டும்...
கஞ்சியில் பிய்த்துப் போட்ட இறால் வாடாவும்...?!
உம்மா வைத்து விட்ட- சுர்மா,
பெருநாள் கைலியில் லேபில் கிழிக்கும் சந்தோசம்,
கைலியில் தங்கிய லேபிலின் எச்சம்…?
தான்தோன்றிக் குளத்தில் அம்மணக் குளியல்,
உடையைத் திரும்பப் பெற…பெருசுகள் முன்னால் போட்ட
தோப்புக் கரணங்கள்…?
அடாத மழையும் விடாத விளையாட்டும்,
சாயந்தர விளையாட்டுக்குப் பிறகு கடை ஆணத்தில்
ஊறிய பரோட்டா?!
குரங்கு பெடலில் சைக்கிள்,
செடியன் குளத்தில் பச்சை- பச்சைத் தண்ணீர் குளியல்,
லக்க்ஷ் சோப்பில் பினாங்கு வாசம்?
ரயிலடிக் காற்றில் பரீட்சை பயத்தில் படிப்பு?
கூடு பார்த்த அடுத்தநாள் தூக்கம்?
ஈ மொய்த்த பதனி?
கலரி வேலை- கலைப்புக்குப் பிறகு…
எறச்சானம்/புளியானம்?
வீடு திரும்பும் நள்ளிரவில் எங்கிருந்தோ…
கிழங்கு சுடும் வாசம்?
பாம்பு முட்டையிடுதாம்! பாதி நிலவொளியில்…
பின்னால் பேய்? ஏழு கட்டையில்…
"நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா..."?
கேள் நண்பா-
இப்பவும் நம்மூர் நல்லாத்தான் இருக்கு...!
மணல் போர்த்திய தார் சாலையும்...
களை சூழ்ந்த நீரோடையும் என...!
கைம் பெண்ணாய் ரயில் நிலையமும்...
கற்பழிக்கப் பட்டவளாய் பேருந்து நிலையமும்...
சவளைப் பிள்ளையாய் தபால் நிலையமும்...
காசும் கட்டப் பஞ்சாயத்துமாய் காவல் நிலையமும்
எனவும்...!
ஊரில் எல்லோரும் திருந்திட்டாங்களாம்...
உன்னையும் என்னையும் தவிர-
அதை நம்பும் கேனத்தனத்துக்காக!
-சபீர்
தகவல் தந்தவர்: சகோதரர்: சாஹூல் ஹமீது
குறிப்பு: இந்த கவிதை எழுதியவர் மன்னிக்க வேண்டும், பொது நலம் கருதி சில வரிகள் நீக்கி பதியப்பட்டிருக்கு, சில காரணங்களுக்காக.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சகோ.சபிரின் வார்தைகள் குபீர் சிரிப்பையும் சிலிர்பையும் தந்த வேளை சுளிர் சாட்டைஅடியாய் இந்த கால அதிரையை அலசியவிதம் பதம்.காலம் உருண்டோடியும் ,முன்னேற்றமற்ற நம் மண் நினைத்தாலே நிச்சயம் இளிச்சவாயர்கள் நாம் தான்.
பதிலளிநீக்கு