Breaking News
recent

லைலா புயல்-பாகிஸ்தானே காரணம்??? பரபரப்பு செய்தி

ஆந்திராவை அச்சுறுத்தி வரும் லைலா புயலுக்கு பெயர் வைத்தது பாகிஸ்தான் என்றும், அடுத்து வரும் புயலுக்கு பாண்டு என பெயர் சூட்டப்படும் என்றும் தெரியவந்துள்ளது.
புயல் என்று வந்து விட்டால் நிஷா, கத்ரீனா, லைலா என பெண்கள் பெயர் தான் வைக்கப்படுகிறது. சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் துணை இயக்குநர் ராஜ் கூறுகையில்,
வங்கக் கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயலுக்கு பெயர் வைக்கும் வழக்கம் கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கியது. சர்வதேச வானிலை ஆராய்ச்சி மைய குழுமத்தில் உறுப்பினர்களாக இருக்கும் வங்கதேசம, இந்தியா, மாலத்தீவு, மியன்மார், ஓமன், பாகிஸ்தான், தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகள் புயலுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற பெயர் பட்டியலை வெளியிட்டது.
இந்த நாடுகள் பரிந்துரைத்த 64 பெயர்கள் தான் தற்போது ஒவ்வொரு புயலுக்கும் பெயராக வைக்கப்பட்டு வருகிறது. பெயரை தேர்ந்தெடுக்கும் போது, சிறியதாக, எளிதில் உச்சரிக்கக் கூடியதாக, சர்ச்சை இல்லாத பெயராக இருக்க வேண்டும் என்ற ஒரு சில விதிமுறைகள் பின்பற்றப்பட்டன.
அப்படி பரிந்துரைக்கப்பட்ட 64 பெயர்களில் இது வரை 22 உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வைக்கப்பட்டுள்ள லைலா என்ற பெயரை பாகிஸ்தான் பரிந்துரைத்ததாகும். அடுத்து வரும் புயலுக்கு பாண்டு என பெயர் வைக்கப்படும். இந்தப் பெயரை பரிந்துரைத்தது இலங்கை.
இப்னு அப்துல் ரஜாக்

இப்னு அப்துல் ரஜாக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.