Breaking News
recent

நாகூர் ரூமிக்கு என்ன நேர்ந்தது?


எச்.ஜி.ரசூல்! தமிழ் இலக்கிய உலகில் ஓரளவு தெரிந்த பெயர் எச்.ஜி.ரசூல் இஸ்லாத்தையும் அதன் நடைமுறைகளையும் கேளியும் கிண்டலும் செய்யக்கூடியவர்.அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உண்டு; இந்திய சல்மான் ருஷ்டி,ஆண் தஸ்லீமா நஸ்ரின் என்று பெயரெடுத்தவர்.கவிதை,கட்டுரை என்ற பெயரில் இலக்கிய கொலை செய்யக்கூடியர்.

ஆனால், நாகூர் ரூமி அவர்கள் இஸ்லாத்தை விரும்பக்கூடியவர்,அதன் அனுஷ்டானங்களை பின்பற்றக்கூடியவர்.ஆன்மீகத்தில் ஈடுபாடும் அதுப்பற்றியும் இலக்கியம் படைக்ககூடியவர்.

முன்னுரை போதும் விசயத்துக்கு வருவோம்!

சகோதர் நாகூர் ரூமி அவர்களின் (முகநூல்) பேஸ்புக்கில் தான் விஐபிக்களுடன் இருக்கும் போட்டோக்களையும் இணைத்துள்ளார்.அதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசியர் கே.எம்.காதர் முகைதீன், தமுமுகழக் தலைவர்.பேராசியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்,எழுத்தாளர் பா.ராகவன்,சன் டீவி வீரபாண்டியன்,பத்திரிக்கையாளர் மாலன்,டாக்டர்.கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது,கவிக்கோ,கவி வைரமுத்து,இப்படி தொடர்கிறது அவரது புகைப்பட தொகுப்பு!

அத்துடன் எச்.ஜி.ரசூலின் புகைப்படமும் சேர்த்துள்ளார்.

நான்கு கேள்விகளை தொகுத்து 'இது முற்போக்கு இலக்கியம்' என்று தன் பப்ளி சிட்டி ஸ்டன்ட் அடிக்க இஸ்லாத்தை இழிவு படுத்த துணிந்த எச்.ஜி.ரசூலை ஒரு விஐபி அந்தஸ்து கொடுத்துள்ள புகைப்படத்தை நீக்குங்கள் என்று அன்பான வேண்டுகோள் வகைகிறோம்.

ஏன் எச்.ஜி.ரசூலை இவ்வளவு சீறியஸா சொல்கிறோம்? உதாரண‌த்திற்கு ஒரு கவிதை:

வந்துதிக்காத ஒர் இனத்தின் நபி - என்றகவிதை

பயானில் கேட்டது

திசையெங்கும் உலகை உய்விக்க வந்துதித்தது

ஒரு லட்சத்து இருபத்துநான்காயிரம்

நபிமார்களென்று.

திருகுரான் காட்டியது

கல்லடியும் சொல்லடியும் தாங்கி

வரலாறாய் மாறியது

இருபத்தைந்து நபிமார் என்று.

ஆதம் நபி...அய்யூப்நபி..

............ .........

ஈசாநபி...மூசாநபி...

இறுதியாய் வந்துதித்த

அண்ணல் முகமது நபி...

சொல்லிக் கொண்டிருந்த போதே

செல்லமகள் கேட்டாள்...

இத்தனை இத்தனை

ஆண் நபிகளுக்கு மத்தியில்

ஏன் வாப்பா இல்லை ஒரு பெண் நபி..?

இது போன்ற எச்.ஜி.ரசூல் கவிதைகளை சகோதர நாகூர் ரூமி படிக்கவில்லையென்றால் இதை படித்த பிறகாவது, அந்த புகைப்படத்தை நீக்கிவிட்டு, மொகரகட்டையின் நட்பையும் விட்டொழியுங்கள்.

Unknown

Unknown

4 கருத்துகள்:

  1. http://nagoorumi.wordpress.com/2010/10/20/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/#comment-237

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள அதிரைச் சகோதரருக்கு, எச் ஜி ரசூலோடு நான் அமர்ந்திருப்பது உங்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் உணர்வுகள் எனக்குப் புரிகின்றன. ஆனால் சில விஷயங்களை நாம் உணர்ச்சி வேகத்தில் புரிந்துகொள்ளத் தவறிவிடக் கூடாது.

    முதலில் அவர் ஒரு முஸ்லிம். அதனால் நம் சகோதரர். இரண்டாவது அவர் ஒரு அற்புதமான கவிஞர் (என் கருத்தில்). அவருடைய மைலாஞ்சி தொகுப்பில் உள்ள தவறான பல கவிதைகளை நான் கடுமையாக விமர்சித்துக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். அதில் நீங்கள் உதாரணம் காட்டியிருக்கும் கவிதையும் ஒன்று.

    ஒரு விமர்சனத்தை ஏற்கவே நமக்குத் துணிவில்லையெனில், நாம் ஏற்கனவே கொண்டுள்ள கருத்தை மட்டுமே எல்லோரும் சொல்ல வேண்டும் என்று உறுதியாக இருப்போமாகில், அது சரியானதல்ல.

    ஏன் ஒரு பெண் நபி இல்லை என்ற கேள்விக்கு இரண்டு பதில்கள் உள்ளன. 1. 1,25000த்தில் பெண் நபி இருந்திருக்கலாம். 2. பெண் நபி இல்லாததற்குக் காரணம் பெண்கள்மீது இறைவன் கொண்ட கருணைதான். எப்படி?

    இறைத்தூதர்களுக்கு மக்கள் கொடுத்தது என்ன? சொல்லடி, கல்லடி, ரத்தம், கொலை மிரட்டல் இப்படித்தான் நாம் அறிந்த வரலாறு காட்டுகிறது. பெருமானாரை ஓட ஓட கல்லால் அடித்துத் துரத்திக் கொண்டே வந்தது வரலாறு. இப்படிப்பட்ட கஷ்டமெல்லாம் பெண்கள் பட வேண்டாமென்று இறைவன் நினைத்திருக்கிறான்.

    இன்னொரு விஷயம். பெண்களுக்கென்று பிரத்தியேகமான உடல் ரீதியான பிரச்சனைகள், கஷ்டங்கள் உள்ளன. மாதவிலக்கு, குழந்தை உண்டாயிருத்தல், பிரசவம் என. இவற்றினூடே ஒரு இறைத்தூதருக்குரிய மிஷனை செயல்படுத்துவது மிகவும் கடினம்.

    இக்காரணங்களினால், இறைவன் கருணை கூர்ந்து பெண்களை அப்பட்டியலில் சேர்க்கவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.

    இந்தக் கருத்தையும் நான் ரஸூலிடமே கூறியிருக்கிறேன். கட்டுரையிலும் எழுதியிருக்கிறேன். இது போன்ற சில சிந்தனைகளை அவர் செய்திருந்தாரெனில் அவருக்கே உண்மை விளங்கியிருக்கும். அப்படிக் கேள்வி கேட்ட அவர் மகளுக்கும் அவரே பதில் சொல்லியிருக்கலாம்.

    பிரச்சனைக்குரிய சில கவிதைகளைப் பற்றி நான் எழுத்து மூலமாகவும் தொலைபேசியிலும், நேரிலும் அவரிடம் கூறியிருக்கிறேன். அவர் மட்டும் இஸ்லாத்தைப் பற்றி சரியான பார்வையை வைக்க முடியுமானால், இஸ்லாமிய தமிழ் உலகம் ஒரு நல்ல கவிஞரை அடையாளம் காண முடியும். பெருமானாரைப் புகழ்ந்து பானத் சுஆத் என்ற கவிதையை எழுதிய க’அப் இப்னு ஜுஹைர் தாமதமாக இஸ்லாத்தில் இணைந்தது போல.

    நாம் கருத்துக்களோடுதான் மோத வேண்டும். மனிதர்களோடு அல்ல. அதுவும் சகோதரர்களோடு அல்ல. அதோடு, நான் விஐபி என்ற பட்டியலில் ’நண்பர்கள்’ என்றும் சேர்த்துள்ளேன். அவர் ஒரு விஐபி-யாக இல்லாமல் போகட்டும், என்னைப் போல. நண்பராக இருப்பதற்காவது நீங்கள் அனுமதிக்கலாம்!

    பொறுமையாக சகோதரர் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
    அன்புடன்
    ரூமி

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள அதிரைச் சகோதரருக்கு, எச் ஜி ரசூலோடு நான் அமர்ந்திருப்பதுகூட உங்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் அவர் ஒரு முஸ்லிம். அதனால் நம் சகோதரர். இரண்டாவது அவர் ஒரு அற்புதமான கவிஞர் (என் கருத்தில். அவருடைய மைலாஞ்சி தொகுப்பில் உள்ள இஸ்லாத்தைத் தவறாகப் புரிந்து கொண்ட பல கவிதைகளை நான் கடுமையாக விமர்சித்துக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். அதில் நீங்கள் உதாரணம் காட்டியிருக்கும் கவிதையும் ஒன்று. ஒரு விமர்சனத்தை ஏற்கவே நமக்குத் துணிவில்லையெனில், நாம் ஏற்கனவே கொண்டுள்ள கருத்தை மட்டுமே எல்லோரும் சொல்ல வேண்டும் என்று உறுதியாக இருப்போமாகில், அது சரியானதல்ல. ஏன் ஒரு பெண் நபி இல்லை என்ற கேள்விக்கு இரண்டு பதில்கள் உள்ளன. 1. 1,25000த்தில் பெண் நபி இருந்திருக்கலாம். 2. பெண் நபி இல்லாததற்குக் காரணம் பெண்கள்மீது இறைவன் கொண்ட கருணைதான். எப்படி? இறைத்தூதர்களுக்கு மக்கள் கொடுத்தது என்ன? சொல்லடி, கல்லடி, ரத்தம், கொலை மிரட்டல் இப்படித்தான் நாம் அறிந்த வரலாறு காட்டுகிறது. பெருமானாரை ஓட ஓட க் கல்லால் அடித்துத் துரத்திக் கொண்டே வந்தது வரலாறு. இப்படிப்பட்ட கஷ்டமெல்லாம் பெண்கள் பட வேண்டாமென்று இறைவன் நினைத்திருக்கிறான். இன்னொரு விஷயம். பெண்களுக்கென்று பிரத்தியேகமான உடல் ரீதியான பிரச்சனைகள், கஷ்டங்கள் உள்ளன. மாதவிலக்கு, குழந்தை உண்டாயிருத்தல், பிரசவம் என. இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு ஒரு இறைத்தூதருக்குரிய மிஷனை செயல்படுத்துவது மிகவும்கடினம். இக்காரணங்களினால், இறைவன் கருணை கூர்ந்து பெண்களை அப்பட்டியலில் சேர்க்கவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். இந்தக் கருத்தையும் நான் ரஸூலிடமே கூறியிருக்கிறேன். கட்டுரையிலும் எழுதியிருக்கிறேன். இது போன்ற சில சிந்தனைகளை அவர் செய்திருந்தாரெனில் அவருக்கே உண்மை விளங்கியிருக்கும். அப்படிக் கேள்வி கேட்ட அவர் மகளுக்கும் அவரே பதில் சொல்லியிருக்கலாம். இவ்வாறாக பிரச்சனைக்குரிய சில கவிதைகளைப் பற்றி நான் எழுத்து மூலமாகவும் தொலைபேசியிலும், நேரிலும் அவரிடம் கூறியிருக்கிறேன். அவர் மட்டும் இஸ்லாத்தைப் பற்றி சரியான பார்வையை வைக்க முடியுமானால், இஸ்லாமிய தமிழ் உலகம் ஒரு நல்ல கவிஞரை அடையாளம் காண முடியும்.

    பதிலளிநீக்கு
  4. சகோ நாகூர் ரூமி அவர்களின் கருத்து வரவேற்க கூடியது.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.