Breaking News
recent

அம்மாவும் மகனும் சிறுகதை

ஹாலோ...அஸ்ஸலாமுஅலைகும்,யாரு பேசுரது தம்பியா...? ஊர்லேந்து உம்மா பேசிரென். நல்ல இருக்கியா..?
இருக்கேம்மா..நீங்க நல்லாஇருக்கியலா...வாப்பாட கால் வலி தேவலையா?
இருக்காஹ...டாக்ரு ரெம்ப தூரம் நடக்க வேணாண்டு சொல்லிட்டாரு 35வருஷமா ஒழச்ச ஒடம்புல அதான் அசதி கொடுத்துரிச்சி!
இப்ப அங்க மணியன்ன...?
சாய்ந்தரம் 5:30மா...
ஊரல இப்ப பகல் 1:00. அப்ப இங்கயுங் அங்கையுங் 4:30மணி நேரம் வித்தியாசமா...? உங்களுக்கு 4:30 மணி கூடுது....

சரிவாப்பா,வேலையிலேயா இருக்கா? நாபாட்டுக்கு பேசிட்டு போரன்.
இல்லமா வேலைக்கு போகல....
இன்னக்கீ லீவா?
இல்லமா.
வேல தேடுறியா?
இல்லமா....

அப்ப எப்படி ஊட்டுக்கு பணம் அனுப்புர...கடன்கிடன் வாங்கி அனுப்பலயெ...?
இல்லமா...நா யாவாரம் பாக்குரேன்!
அல்ஹம்துலில்லாஹ்.....என்னாயாவாரம் பாக்குறா தம்பீ?
அது....இல்லமா அது ஒரு யாவாரம்.
சொல்லு என்ன யாவாரம்?
உங்களுக்கு சொன்னா புரியாது....

யதாஇருந்தாலுங் சொல்லு....ஹாலாலான யாவாரம் தான?
.........................
...........................ம்ம்ம்ம்ம்
என்ன பதிலில்ல உன்ன சொமந்து,பெத்து,வளத்தவ கேக்றன்..இப்ப சொல்லப்பாறியா இல்லையா?

வங்கி யாவாரம்...!
வாங்கி யாவாரமா...?
ஊருக்கு போரவங்களுக்கு கடன் எடுத்து கொடுப்பேன். எனக்கு கமிஷன் கிடைக்கும்.
ஊருக்கு போறவங்களுக்கு கடன் கொடுத்தா யாரு திரும்ப கட்டுவா...?
இல்லமா கட்டமாட்டாங்க! அது நாளத்தான் எனக்கு கமிஷன்...
அப்ப ஏமாத்து யாவாரம்டு சொல்லு....
.......................
.........................
அப்படி இல்லமா....நம்மூர்ல நெரையா பேருக்கு நாந்தான் எடுத்து கொடுத்தேன்.

அந்த காசிலதான் எங்களுக்கு தந்தியா....?நாங்க இவ்லோநாள் சாப்ட்டது...எல்லாம் அந்த ஹராமாம காஸ்தான்...?


வாப்பாட்ட சொல்லிடாதமா...
நான் என்னத்த சொல்லரது ஊரே சொல்லுது...நேர்த்து வாப்பாட்டா யாரோ சொல்லிருக்காங்க, நீ இப்ப ஊர்லேந்து போன‌துலேந்து ஒரே சண்ட‌ வழக்குரியாம், ,இப்ப என்னாடாண்டா ஹராமான யாவாரம் பாக்குரத பெருமையா சொல்ரா...

இப்ப ஊர்ல வந்து ஒழுங்காத்தான நோம்பெல்லாம் புடிச்ச,தொழுவல்லாம் போனிய இது ஊருக்கு போட்ட வேஷமா...?
எனக்கு நெஞ்சி அடைக்கிது என்னால பேச முடியால நீ எப்ப அல்லாக்கு பயந்து ஹாராமான யாவாரத்த உட்டு, இன்னோத்தவங்க வீட்டுவிசயத்துல தலயிடாம இருக்கியோ அப்ப பேசு... இல்லன்னா பேசாத. உன்ன மாமாட்டையும் சொல்ரேன்...

ஹாலோ....உம்மா.....உம்மா.....

(பத்து நிமிடம் கழித்து உம்மாவின் போனுக்கு கால் போட்டான் அவன்...'நீங்கள்,தொடர்பு கொண்ட வாடிக்கையாளார் எண் சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளது;சிறிது நேரம் கழித்து டயல் செய்யவும்'என்றது. இனி நான் உங்களுக்கு பணம் அனுப்ப மாட்டேன்.எனக்கு இந்த தொழில் பிடித்து போயிற்று. என்னை எதற்கும் எதிர் பார்க்க வேண்டாம்.) என்று சொல்வதற்காகத்தான் அருமை மகன் போன் போட்டது உம்மாவுக்கு தெரியாது...


(இது கதையல்ல நிஜம் ஆனால், எந்த தனி நபரையும் குறிப்பிட்டு எழுதவில்லை.அதுப்போல், 4:30 மணி நேர வித்தியாசம் என்பதால்அதிரை- லண்டனை மையப்படுத்தி எழுதியவையும் அல்ல)
Unknown

Unknown

Blogger இயக்குவது.