Breaking News
recent

உலகின் மிகவும் குண்டான மனிதன்!

உலகின் மிகவும் பருமனான மனிதன் என்ற பெருமைக்குரிய நபர் 50 வயதான போல் மேஸன். இங்கிலாந்தின் இப்ஸ்விச் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

இருந்தாலும் இந்தப் பெருமையால் இவருக்கு எந்தப் பலனும் கிடையாது. 24 அணிநேரமும் உண்ணுவதைத் தவிர இவருக்கு வேறு வேலையே கிடையாது.

இதனால் இருதயக் கோளாறு உட்பட பல ஆரோக்கியப பிரச்சினைகளுக்கும் ஆளாகியுள்ளார். இவர் உணவை உள்வாங்கும் அளவைக் குறைப்பதற்காக குடல் உட்பட வயிற்றின் அளவைக் குறைப்பதற்காக ஏற்கனவே சத்திர சிகிச்சையொன்றும் செய்யப்பட்டுள்ளது.


இருந்தாலும் முழுமையான பலனில்லை. எதிர்ப்பார்ததளவு உணவை குறைக்க அவரால் முடியவில்லை. உணவு உண்ணும் பழக்கத்திற்கு நான் அடிமையாகிவிட்டேன். அதை நிறுத்தவோ,குறைக்கவோ என்னால் முடியவில்லை என்கிறார் போல்.

இவை எல்லாவற்றையும் விட மிகவும் கொடுமையானது 2000 முதல் அவரால் எழுந்து நடமாடக் கூட முடியவில்லை. எல்லாமே இந்த மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிதான். இவ்வளவுக்கும் போல் சிறு வயதுமுதலே உணவுப் பிரியர் அல்ல.

தனது 20 வயதிலிருந்துதான் தான் 24 மணி நேர தீனிப்பண்டாரமாக மாறியதாகவும்,அதற்குக் காரணம் ஒரு பெண் என்றும் கூறுகின்றார் போல். இவரின் 21வது வயதில் ஒரு 39 வயதுப் பெண்ணுடன் இவருக்கு காதல் மலர்ந்துள்ளது.

தனக்கு எல்லாமே இனி அவள்தான் என்று அவளுடைய வீட்டிலேயே அவழுடன் வாழத் தொடங்கியுள்ளார். ஆனால் அந்தப் பெண்ணோ தனது வீட்டு வேலைகளைப் பூர்த்தி செய்வதற்கு தனக்குத் தேவையான சில அலுவல்களை இவரைக் கொண்டு செய்து முடித்தபின் அவருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு வேறு ஒருவருடன்  வாழத் தொடங்கிவிட்டார்.

மனமுடைந்து போன போல் மீண்டும் தாய் விடு வந்த போது தாயும் நோயாளியாகிவிட்டார். சாதாரணமாக இந்த மாதிரி நேரத்தில் மற்றவர்கள் மதுவுக்கு அடிமையாவார்கள் கவலை மறக்கக் குடிப்பார்கள். ஆனால் போல் வித்தியாசமாக உண்ண ஆரம்பித்தார். முடிவில்லாமல் உண்டார்.

இரவில் தூங்காமல் கூட விழித்திருந்து முழு நாளும் உண்ண ஆரம்பித்ததாக அவர் கூறுகின்றார். அதன் விளைவு தான் இன்று அவரை இந்தக் கதிக்கு ஆளாக்கியுள்ளது.

முட்டை பால், கபாப்,நொறுக்குத் தீனி மற்றும் இதர திரவ உணவுகள் என எல்லாமாகச் சேர்த்து ஒரு நாளைக்கு 20 ஆயிரம் கலோரி உணவை இவர் உள்ளே தள்ளிவிடுகின்றார்.

இது சராசரியாக ஒரு மனிதனுக்குத் தேவைப்படும் அளவை விட பத்து மடங்கு அதிகமானதாகும். இவருக்கு மேற்கொள்ளப்பட்ட வயிற்றின் அளவுக் குறைப்பு சத்திர சிகிச்சையின் பின்பு தான் இந்த மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியிலாவது இவரால் ஓரளவுக்கு வலம் வர முடிகின்றது.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.