Breaking News
recent

அதிரை கோடைகாலப் பயிற்சி முகாம்


கோடைகாலப் பயிற்சி முகாம்  
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும்.  கடந்த ஆண்டுகளைப் போன்று, இவ்வாண்டும் மாணவ மாணவியர்க்கான பயனுள்ள கல்விப் பயிற்சிகளை வழங்கும் ஒரு மாத காலப் பயிற்சி முகாம், இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 01 – 05 – 2011 முதல் 31 – 05 - 2011 வரை துபை 'அதிரை இஸ்லாமிக் மிஷன்' மற்றும் ஏ. எல். எம். பள்ளி நிர்வாகம் சார்பில் மேற்படிப் பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கின்றது.  ஆர்வமுள்ள பெற்றோர்கள் தம் ஏழு வயதுக்கு மேற்பட்ட மக்களைப் பயிற்சிகளில் பங்குபெற வைப்பது கொண்டும், மாணவ-மாணவியர் தாமே வந்து இணைந்து பயன்பெறுவது கொண்டும் இந்த விடுமுறை நாட்களைப் பயனுள்ள வழியில் கழித்து இம்மை-மறுமை வெற்றிக்கான முயற்சியில் ஒத்துழைப்புத் தருமாறு கோருகின்றோம்.
பாடங்கள்:  * தீனியாத் பயிற்சிகள்
      • இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை
      • கம்ப்யூட்டர் கோர்ஸ்
      • Spoken English / Arabic
      • Personality Development
      • உயர்கல்வி வழிகாட்டுதல்கள்...      மற்றும் பல.

வகுப்புகளின்  நேரம்: காலை ஒன்பது மணி முதல்  பகல் ஒரு மணிவரை.
தூரப் பகுதிகளிலிருந்து மாணவ-மாணவியரை அழைத்து வருவதற்கும், வகுப்புகள் முடிந்த  பின்னர் திருப்பிக் கொண்டுவந்து  விடுவதற்கும் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. முழுமையாகப் பங்கு பெற்று முடிக்கும் மாணவ-மாணவியர்க்குப் பரிசுகளும் அன்பளிப்புகளும் வழங்கப்படும்.  
தொடர்புக்கு:  9566716216 / 9750969302 / 9894989230   
                         
                                          அன்புடன்  அழைக்கும்,
                                                AIM & ALM
                                             அதிராம்பட்டினம்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.