Breaking News
recent

சவூதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை!

சவூதி அரேபியாவில் 6 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றத் தடை விதிக்க அந்நாடு திட்டமிட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து சவூதியின் அல் வதான் செய்தித் தாளுக்கு அந் நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அதெல் அல் பகி அளித்துள்ள பேட்டியில், செளதியில் உள்நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வேலைவாய்ப்பைப் பெற உள்நாட்டினரிடையே போட்டியை உருவாக்கி, அவர்களது பணித் திறமையை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் வெளிநாட்டினர் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேல் செளதியில் பணியாற்ற தடை விதிக்கப்படும். இந்த சட்டத்தை கொண்டு வந்த பின், அதை அமலாக்க வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு 5 மாத கால அவகாசம் வழங்கப்படும்.

கறுப்பு சந்தையில் உலவும் விசாக்களை 99 சதவீதம் கட்டுப்படுத்தவும் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்படும் என்றார்.

இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்தால் பல லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படுவர். இந்த ஆண்டு இறுதிக்குள் செளதி அரேபியாவில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.