Breaking News
recent

இங்கிலாந்தில் வன்முறை பரவும் முறைகள்


  இங்கிலாந்தில் வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில் அங்கு வன்முறையாளர்கள் தங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு பிளக்பெரி மெசஞ்சர் சேவை மற்றும் பேஸ்புக், டுவிட்டர் வலையமைப்புகளை பாவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஞாயிறு முதல் அங்கு இடம்பெற்று வரும் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளோர் தங்களிடையே தகவல்களைப் பரிமாற்றுவதற்கு இவ்வசதிகள் பெரும் பங்களிப்பு செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றின் ஊடாகவே எங்கு அடுத்து வன்முறை நிகழப்போகின்றது? எங்கே ஒன்று கூடுவது, எவற்றைத் தாக்குதவது மற்றும் கொள்ளையடிப்பது தொடர்பில் தகவல்கள் பரிமாற்றப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பேஸ்புக் சமூகவலையமைப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட மார்க் டகனுக்கென தனியாக பக்கம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. www.facebook.com/pages/RIP-Mark-Duggan/200659976657547

பேஸ்புக், டுவிட்டர் சேவைகளை விட பிளக்பெரி மெசஞ்சர் சேவையின் மூலமே தகவல்கள் அதி வேகமாகவும் பாதுகாப்பாகவும் பரிமாற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானிய இளைஞர்களில் 37% பிளக்பெரி கையடக்கத்தொலைபேசிகளையே பயன்படுத்தி வருகின்றனர்.

இக் கையடக்கத்தொலைபேசிகளுக்கான பிரத்தியேக தகவல் பரிமாற்ற சேவையே பிளக்பெரி மெசஞ்சர் ஆகும்.

இதன்மூலம் பலருக்கு ஒரே நேரத்தில் வேகமாகவும், துரிதமாகவும், இலவசமாகவும் தகவல்களை அனுப்பமுடியும்.

மேலும் இதன் சிறப்பம்சம் அதன் பாதுகாப்பு பொதுவாக பிளக்பெரி மெசஞ்சர் சேவையின் மூலம் தகவல்களை அனுப்பும் போது அவற்றின் மென்பொருள் குறியீட்டுச்சொற்களை (என்கிறிப்ஷன்) பரிசீலிக்க முடியாது.

மேலும் பிளக்பெரி மெசஞ்சர் பாவனையாளர்கள் பின்(இரகசிய) இலக்கமொன்றினை பரிமாறிக் கொள்ள வேண்டும் .இது அவர்களின் தகவல் பரிமாற்றத்தை இரகசியமாக வைத்திருக்க உதவுகின்றது.

இதனை நன்கு அறிந்துவைத்துள்ள கலகக்காரர்கள் இவற்றைப் பயன்படுத்துவது தற்போது தெரியவந்துள்ளது. இது அங்குள்ள பாதுகாப்புப் பிரிவினருக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது.

எனினும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள 'பிளக்பெரி' கையடக்கத் தொலைபேசிகளின் தயாரிப்பு நிறுவனமான கனடா நாட்டைச் சேர்ந்த 'ரிசேர்ச் இன் மோசன்' பொலிஸாருக்கு வன்முறையைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட அளவு தகவல்களை வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.