Dinamani :தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி கூடாது!

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள கூடாது என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வீ.தங்கபாலுவை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக கட்சியினரிடம் தங்கபாலு கருத்து கேட்டு வருகிறார். என்னிடமும் கருத்து கேட்டார்.

அதனால் நேரடியாக வந்து என் கருத்தைத் தெரிவித்தேன். தி.மு.க.வுடன் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் என் கருத்து. இது என் தனிப்பட்ட கருத்து இல்லை. காங்கிரஸார், இளைஞர் காங்கிரஸார் எல்லோருடைய கருத்தும் இதுதான்.
Dinamani
Unknown

Unknown

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.