Breaking News
recent

சவூதி இளவரசர் சுல்தான் இப்னு அப்துல் அஜிஸ் மறைவு


சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஜிஸ் சனிக்கிழமை இறந்தார்.

சவூதி அரேபியாவின் துணைப் பிரதமராகவும் பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சராகவும் இருந்த இளவரசர் அஜிஸ் வயது 86. 

கடந்த ஜூன் மாதம் முதல் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா வந்திருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக சவூதி அரேபிய அரசவை தனது அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. "இரண்டு புனிதமான மசூதிகளின் தக்காரான அரசர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ், தமது சகோதரர் உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை அதிகாலை வெளிநாட்டில் இறந்தது குறித்து ஆளாத் துயர் அடைகிறார்' என்று அரசவையின் அதிகாரபூர்வ அறிவிப்பு கூறுகிறது. 
இவரது மறைவைத் தொடர்ந்து 78 வயதாகும் இவரது இளைய சகோதரர் நயஃப் இளவரசராகிறார். செவ்வாய்க்கிழமை சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் நல்லடக்கம் நடைபெறுமென அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 87 வயதாகும் சவூதி அரசர் அப்துல்லா, ரியாதில் உள்ள மருத்துவமனையில் இப்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




Unknown

Unknown

1 கருத்து:

  1. தலைப்பு தவறாக உள்ளது. இப்போது இறந்தவர் அப்துல் அஜீஸின் மகன் இவர் பெயர் சுல்தான் இப்னு அப்துல்அஜீஸ்

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.