
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை பதவி ஏற்கின்றனர். மாநகராட்சிகளின் துணை மேயர் தேர்தல் 29ம் தேதி சனிக்கிழமை நடக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு லட்சத்து 12,759 பதவிகளுக்கான தேர்தல் நடந்தது. 10 மாநகராட்சிகளையும் அதிமுக கைப்பற்றியுள்ளது. 125 நகராட்சிகளில் 88ல் அதிமுக, 23ல் திமுக; 529 பேரூராட்சி தலைவர் பதவிகளில் 284ல் அதிமுக, 121ல் திமுக வென்றுள்ளன. மீதி இடங்களில் மற்ற கட்சிகள் சிறிய அளவில் வெற்றியை சந்தித்துள்ளன. வெற்றி பெற்ற உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் நாளை மறுநாள் பதவி ஏற்கின்றனர். இதற்கான பணிகள் நடந்து வருகிறது. 29ல் துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி துணை தலைவர்கள், மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய தலை வர், துணை தலைவர், சிற்றூராட்சி துணை தலைவர் தேர்தல் நடக் கும். இவர்களை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்