வங்கக்கடலில் ஏற்பட்டுள் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து உள்ள தால் தமிழகம் முழுவதும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. தஞ்சை மாவட் டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இடைவிடாது பலத்த மழை பெய்தது. தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்த வண்ணம் இருந்தது. தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்துள்ளனர்.
முன்பட்ட சம்பா, தாளடி சாகுபடிக்கு தற்போது பெய்து வரும் மழை ஏற்றதாக உள்ளது. தற்போது நடவு செய்துள்ள நெற்பயிர்கள் தான்நீரில் மூழ்கியடி காணப்படுகிறது இதில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு பகுதிகளில் நெற்பயிர்களை நீர் சூழ்ந்துள்ளது. மதுக்கூர் பகுதியில் 1000 எக்டேர் நெற்பயிர்களும், திருவையாறு பகுதியில் 500 எக்டேர் நெற்பயிர்களும், தஞ்சை பகுதியில் 200 எக்டேர் நெற்யிர்களும், ஒரத்தநாடு பகுதியில் 4 ஆயிரம் எக்டேர் நெற்பயிர்களும் நீரில் மூழ்கியது.
தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி என மொத்தம் 6 ஆயிரத்து 164 எக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. இந்த பகுதி பெரும்பாலும் கல்லணை கால்வாய் பாசன பகுதியை சேர்ந்தது ஆகும். தற்போது இந்த பகுதிகளில் அதிக மழை பெய்து வருவதை தொடர்ந்து கல்லணையில் இருந்து கல்லணைக்கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது.
இதனால் வயல்களில் தேங்கி உள்ள மழை நீர் வடிவதற்கு ஏதுவாக உள்ளது. இருப்பினும் மழை அவ்வப்போது பெய்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
வியப்பான உண்மை தகவல்கள் தெரிந்து கொள்ளுங்கள்..
பதிலளிநீக்குஇதோ சுட்டியை சொடுக்கி படியுங்கள்.
ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?
.