கோடிக்கணக்கான விலங்குகளைக் கொண்ட இப் பூமியில் நாம் பார்த்துள்ளவை எண்ணிக்கையில் மிகமிகக் குறைவு. அவற்றில் சில நாம் நினைப்பதனை விடவும் அழகானவை. சில அழகானவற்றை நாம் கண்டது கூட இல்லை.




ரஷ்ய ஆர்க்டிக் கடலடியில் வாழும் விசித்திர உயிரினங்கள்






உலகின் மிகப் பெரிய குகையான ஹாங் சொன் டொங்கின் மிரட்டலான உட்பக்கம்
'ஹாங் சொன் டொங்' என்பது வியட்நாமில் அமைந்துள்ள மிகப் பெரிய குகையாகும்.
இதுவே உலகிலேயே மிகப் பெரியதாகவும் கருதப்படுகின்றது.
வியட்நாம் காடுகளுக்குள் அமைந்துள்ள இக்குகையானது 2009 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இக்குகையின் நுழைவாயில் 1991 ஆம் ஆண்டு ஹோ கான் என்ற உள்ளூர்வாசியொருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

எனினும் குகையினுள்ள இருந்து வெளியாகிய மிரட்டலான மர்ம ஒலியால் அவர் அதனுள் நுழைய முயவில்லை. அந்த மர்ம ஒலிக்கான காரணம் அதனுள் பாயும் ஆற்று நீரின் சத்தம் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டின் பின்னர் பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் அதனை கண்டுபிடித்தைத் தொடர்ந்தே இது தொடர்பில் வெளியுலகிற்கு தெரியவந்தது.
இதன் நீளம் 2.5 மைல்கள் உயரம் 800 அடி என்பதுடன் அகலம் 300 அடியெனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இக்குகையின் உள்ளேயே காடு அமைந்திருப்பது இதன் விசாலத்திற்கு ஓர் உதாரணம்.
மேலும் சுமார் 150 குகைகள் இப் பிரதான குகையோடு இணைந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இக் குகையானது 2 முதல் 5 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் உருவாக்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.




அல்லாஹ்வின் அற்புதம்
பதிலளிநீக்குSUBHANALLAH ...
பதிலளிநீக்கு