சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதென மத்திய அரசு வியாழக்கிழமை இரவு ஒருமனதாக முடிவுசெய்துள்ளது.
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக 4.5 சதவீதம் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்படும். பிரதமர் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இந்த முடிவை எடுத்தது. இதன்மூலம், 1992-ம் ஆண்டு சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையச் சட்டத்தின் பிரிவு 2 (சி)யில் கூறியுள்ளபடி, கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு சலுகை கிடைக்க வழியேற்பட்டுள்ளது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பெüத்தர்கள், பார்சிகள் ஆகியோரை சிறுபான்மையினர் என்று மேற்கண்ட சட்டப் பிரிவு கூறுகிறது. ஒர் அரசு உத்தரவு மூலம் உள் ஒதுக்கீடு குறித்த அறிவிக்கை வெளியிடப்படும். Unknown
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிறுபான்மையினருக்கு 4.5 % உள் ஒதுக்கீடு செய்து இதை அனைத்து சிறுபான்மையினரும் பிரித்துக்கொள்வது என்பது யானைப் பசிக்கு சோளப்பொறி போன்றதாகும். முஸ்லிம்களின் கோரிக்கையான 10 % தனி இட ஒதுக்கீடு மூலமே அரசின் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் இதர பணிகளுக்கு இவர்களை கொண்டு செல்வதன் மூலம் சிறுபான்மையாக உள்ள முஸ்லிம் மக்கள்களை அவர்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்து உயர்த்தலாம்.
பதிலளிநீக்கு