Breaking News
recent

துபாய் பயணிகளை பரிதவிக்கச் செய்யும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

துபாயில் இருந்து திருச்சி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஜுன் 30 ஆம் தேதி வரை புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களுக்கான சேவையினை ரத்து செய்துள்ளதால் பயணிகள் பரிதவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர் சையது பயாஸுதீன் ( + 971 50 53 566 50 ). கடந்த 2006ம் ஆண்டு முதல் துபாய் இஸ்லாமிய வங்கியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இவர் வரும் ஜுன் 7ம் தேதி துபாயில் இருந்து திருச்சி செல்வதற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தார். விடுமுறையில் தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்களைக் காண ஆவலுடன் இருந்து வந்தார்.

இந்நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது சேவையினை ஜுன் 30ம் தேதி வரை புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் ரத்து செய்துள்ளது என்ற தகவலை தனது நண்பர் மூலம் தெரிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் பயணச்சீட்டு ஏஜெண்டான அல் மஹா டிராவல்ஸுக்கு சென்றார். அங்குள்ள ஊழியர்களிடம் இது குறித்து விசாரித்தபோது அவர்கள் ஆம் புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் ஜுன் 30 வரை சேவையில்லை. அதற்கான முழுக்கட்டணத்தை திரும்பப் பெறலாம் அல்லது அடுத்த விமானத்தில் செல்லாம் என்றனர். 

விமான சேவை ரத்து செய்யப்பட்ட தகவல் பயணிகளுக்கு அனுப்பவில்லையே எனக் கேட்டபோது இது குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தான் பயணிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

அதனையடுத்து தனது பயணத்திட்டத்தை மாற்றிக் கொண்டு திரும்பினார். இவரது நண்பர் மூலம் தெரிந்ததால் பஸாதீன் தனது பயணத்திட்டத்தை முன்பே திட்டமிட வசதியாக இருந்துள்ளது. இது குறித்து விபரமறியாத பயணிகளின் பாடு பெருந் திண்டாட்டம் தான்.
நன்றி:தட்ஸ்தமிழ்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.