Breaking News
recent

அரசு கல்லூரிகளில் 299 புதிய பாடப்பிரிவுகள் துவக்கம்


நடப்பு கல்வியாண்டில், 51 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 299 புதிய இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பாடப்பிரிவுகளை துவக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2012-13ம் கல்வியாண்டில் புதிய இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி பாடப் பிரிவுகள் துவக்கவும், அதை தொடர்ந்து 2012-13, 2013-14 மற்றும் 2014-15 ஆகிய ஆண்டுகளில் தேவையான உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உருவாக்கி, தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய, கல்லூரிக் கல்வி இயக்குநர் கருத்துரு வழங்கியிருந்தார்.
அதைதொடர்ந்து, நடப்பாண்டிற்கான உயர்கல்வி மானிய கோரிக்கையில், 51 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 299 புதிய பாடப்பிரிவுகள், நடப்புக் கல்வியாண்டு முதல் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நடப்புக் கல்வியாண்டு முதல், 51 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 299 புதிய இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பாடப்பிரிவுகளைத் துவக்கலாம்.
இக்கல்லூரிகளில் துவக்கப்படும் புதிய பாடப்பிரிவுகளுக்காக, நடப்பு ஆண்டிற்கு, 369 உதவிப் பேராசிரியர் பணியிடங்களும், 2013-14ம் ஆண்டிற்கு, 365 உதவிப் பேராசிரியர் பணியிடங்களும், 2014-15ம் ஆண்டிற்கு 107 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் என ஆக மொத்தம் 841 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அரசு கல்லூரிகளில், புதிதாகத் துவக்கப்படும் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பாடப்பிரிவுகளின் முழு விவரங்களை, தமிழக அரசின் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.