Breaking News
recent

திருவாரூர்- பட்டுக்கோட்டை அகலரயில் பாதை திட்டபணியை உடனடியாக துவங்க வேண்டும்

திருவாரூர்-பட்டுக்கோட்டை அகல ரயில்பாதைக்கான பணிகளை உடன் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிரைக்கு இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு வந்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கத்திடம் மனு கொடுக்கப்பட்டது.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தர்காக்கள் பேரவை அமைப்பின் சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிரை பேரூராட்சித்தலைவர் எஸ்.ஹெச். அஸ்லம் அவர்களின் அழைப்பின் பேரில்,மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் கலந்து கொண்டார். 
விழாவில், திருவாரூர் முதல் பட்டுக்கோட்டை அகல ரயில்பாதைக்கான வேலைகளை உடனே துவங்க வேண்டும் என்று அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அதற்கு மத்திய அமைச்சர் கூறுகையில், திருவாரூர்-காரைக்குடி வரை முதற்கட்ட வேலைகள் துவங்கி பணிகள் நடந்து வருகிறது. மேலும் திருத்துறைப்பூண்டி முதல் பட்டுக்கோட்டை அகல ரயில்பாதை வேலையை உடன் துவக்குவதற்கு வரும் கூட்டத்தொடரில் பேச உள்ளேன். அதற்குண்டான வேலைகள் விரைவில் தொடங்கும் என்று கூறினார். 


இஃப்தார் - நோன்பு திறக்க அழைக்கப்பட்டிருந்த அமைச்சர், அவசரமாக டெல்லி செல்லும் வேலை இருந்ததால் பகல் இரண்டு மணிக்கே அதிரைக்கு வந்துவிட்டார்.  இதனால் பகல் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு விருந்து அளிக்கப்பட்டது.
Unknown

Unknown

4 கருத்துகள்:

  1. என்னங்க !?

    அப்படின்னா பகல் உணவோடு இஃப்தார் ! (சுடச் சுட காரமாக) முடிந்ததா ?

    இது நல்லாத்தானே இருக்கே... இதுக்கு தாத்தாவையே அழைத்திருக்கலாமே...

    பதிலளிநீக்கு
  2. இவர்கள் தான் தர்காக்கள் பேரவை அமைபினறோவ்!
    முஸ்லிம்களுக்கு ரமழான் நோன்பு கடமையாக்க பட்டதே ! அப்போ இவர்களுக்கு ?

    பதிலளிநீக்கு
  3. இது என்ன கொடுமை. முஸ்லிம் அல்லாதவர்கள் சாப்பிடும்போது நாம் சாப்பிடாமல் அவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கணும். அதை விட்டுட்டு அவர்களுடன் சேர்த்து சாப்பிடுவதுதான் தர்கா வாசிகளா?

    பதிலளிநீக்கு
  4. இது என்ன கொடுமை. முஸ்லிம் அல்லாதவர்கள் சாப்பிடும்போது நாம் சாப்பிடாமல் அவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கணும். அதை விட்டுட்டு அவர்களுடன் சேர்த்து சாப்பிடுவதுதான் தர்கா வாசிகளா?

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.