அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பான அதிரை சொந்தங்களே..
அதிரை தமுமுக கிளை சார்பாக இந்த வருடம் (2012) சஹர் உணவு பல நல்ல உள்ளங்களின் உதவியுடன் நோன்பு பிறை ஒன்று முதல் மிக சிறப்பாக அதிரை ஜாவியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான வெளியூர் நோன்பாளிகள் பயனடைந்து வருகிறார்கள். சஹர் உணவு ஏற்பாடு தொடர்பாக அதிரை தமுமுக நகர தலைவர் சகோதரர் ஜகபர் சாதிக் அவர்கள் வெளியிட்டுள்ள காணொளி செய்தி உங்கள் பார்வைக்காக.
எங்கள் இடைவிடாத சமுதாய சேவைகளுக்கு உதவிகள் செய்துவரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் வல்ல ரஹ்மான் நல்லருள் புரிவானாக. எங்கள் சமுதாய சேவை தொடர நம் சகோதரர்கள் அனைவரும் வல்ல ரஹ்மானிடம் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்