அதிரை கடற்கரையில் மாணவர் சடலம் மீட்பு!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த மாளியக்காடு கிராமத்தில் உள்ள லோகநாதன் மகன் பிஸ்லானி(17). பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 3ம் தேதி பள்ளிக்கு சென்று வருகிறேன் என்று பிஸ்லானி வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியுள்ளனர். ஆனால் கிடைக்கவில்லை. எனவே அதிராம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் லோகநாதன் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். 
இந்நிலையில் அதிராம்பட்டினம் அடுத்த வெளி வயல் கடற்கரையில் ஒரு ஆண் சடலம் ஒதுங்கியிருப்பதாக மீனவர்கள் கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அது காணாமல்போன மாணவன் பிஸ்லானி என அவரது உறவினர்கள் அடையாளம் காட்டினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.