Breaking News
recent

எழுத்தாளர்கள், சமூகத்தில் ஆயுதம் ஏந்தாத போராளிகள்,'' லேனா தமிழ்வாணன்

"எழுத்தாளர்கள், சமூகத்தில் ஆயுதம் ஏந்தாத போராளிகள்,'' என, எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசினார். மணிமேகலை பிரசுரத்தின், 30 நூல்களின் வெளியீட்டு விழா, புத்தக கண்காட்சியில் நேற்று நடந்தது. தமிழ்வாணன் எழுதிய, தமிழ்வாணன் துப்பறியும் மர்ம நாவல்கள், கண்ணப்பன் எழுதிய, "செட்டிநாட்டு பகுதியில் ஒரு பண்பாட்டு சுற்றுலா', ஸ்டீபன் எழுதிய, 'ஆசிரியர்கள் மாணவர்களை அணுக வேண்டிய புதிய முறைகள்', செந்தமிழ் செல்வன் எழுதிய, "வணிகர்களுக்கான கணக்குகளை எழுதுவது எப்படி' என்பது உள்ளிட்ட, 30 புத்தகங்கள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில், நல்லி குப்புசாமி பேசியதாவது: கடந்த, 1978ல், 27 அரங்குகளுடன் புத்தக கண்காட்சி துவக்கப்பட்டது; தற்போது, 750ஆக விரிவடைந்துள்ளது. வெளிநாடுகளில், தமிழ் பேசும் மக்கள் அதிகம் என்பதால், புத்தகங்களுக்கு மவுசு உண்டு என்பதை கண்டறிந்து, புத்தகங்களை ஏற்றுமதி செய்யும் கலையை அறிமுகப்படுத்தியவர், ரவி தமிழ்வாணன். நாவல்கள், சிறுகதைகள், கதை புத்தகங்கள் என, புத்தக விரும்பிகள் எண்ணங்களுக்கு ஏற்ப, புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். வெளிநாடுகளில் இருந்தும், புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால், பேனா, பேப்பர் இல்லாத, உலகம் உருவாகும் என்கின்றனர். தொழில் நுட்பம் உச்சத்தை எட்டினாலும், புத்தகங்களை கையில், புரட்டி பார்த்து படிக்கும் சுகம் எதிலும் கிடைக்காது; காலத்தாலும் மாற்ற முடியாதது. இவ்வாறு, அவர் பேசினார். எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசியதாவது: எல்லா காலத்திலும், புலவர்களை ஆதரிக்க மன்னர்கள் இருந்தனர். தற்போது, எழுத்தாளர்களை ஆதரிக்க யாரும் இல்லை; எழுத்தாளர்கள், சமூகத்தில் ஆயுதம் எந்தாத போராளிகள். பேனா என்ற ஆயுதத்தை கொண்டு, சமூ கத்தின் தலையெழுத்தை மாற்றுபவர்கள். வறுமை, எழுத்தாளர்களின் சொத் தாகிறது. தன் நலனில் அக்கறை கொள்ளாமல், சமூகமும், நாடும் முன்னேற வேண்டும் என்ற எண்ணமே, இதற்கு காரணம்.
இவ்வாறு, அவர் பேசினார். மணிமேகலை பிரசுர நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன், சீர்காழி சிவசிதம்பரம், எழுத்தாளர் சிவகுமாரன், நியூயார்க் தமிழ் சங்க தலைவர் பிரகாஷ் சுவாமி, உலக தமிழ் பண்பாட்டு கழக தலைவர் ரபியுத்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.