Breaking News
recent

அரசிதழில் காவிரி தீர்ப்பு: ஜெயலலிதாவுக்கு தஞ்சையில் 7ம் தேதி பாராட்டு விழா!

காவிரி நதி நீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட வைத்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தஞ்சையில் 7ம் தேதி பாராட்டு விழா நடக்கிறது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
முதல்வர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு காவிரி நீர்பாசன விளைபொருட்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். ரங்கநாதன் தலைமையில் காவிரி டெல்டா விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சந்தித்து, காவிரி நடுவர்மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து, தமிழகத்திற்கான காவிரி நீரினை உச்ச நீதிமன்றம் மூலம் பெற்றுத் தந்தமைக்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்தச் சந்திப்பின்போது, தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருள்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்புச் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ரெங்கநாதன், துணைத் தலைவர்கள் வி.ராஜாராம், டி.எஸ்.கோபால்தாஸ், வி.கண்ணன், இணைச் செயலாளர் பி.காந்தி பித்தன், பொருளாளர் எம்.பாலகிருஷ்ணன் மற் றும் நிர்வாகிகள் ஜெ.வரத ராஜன், டி.பி.எஸ்.விக்ரமன், பாலு தீட்சிதர், தமிழக விவசாயிகள் சங்க (எஸ்.ஏ.சின்னசாமி பிரிவு), திருவாரூர் மாவட்ட தலைவர் பயரி எஸ்.கிருஷ்ணமணி, மாவட்ட செயலாளர் ஆர். மோகன்தாஸ் மற்றும் காவிரி டெல்டா விவசாயிகள் குழுமத்தின் திருவாரூர் மாவட்டத் தலைவர் கே.குஞ்சித பாதம் மற்றும் மாவட்ட பொது செயலாளர் வெ.சத்தியநாராயணன் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் (எம்.ஆர்.சிவசாமி பிரிவு) மாவட்ட பொறுப்பாளர் செம்மங்குடி எம்.ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, முதல்- அமைச்சர் ஜெயலலிதா, காவிரிக்காக போராடி, காவிரியில் தமிழகத்தின் உரிமையை சட்டப்படி நிலைநாட்டி பெற்றுத் தந்தமைக்கு தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் சார்பில் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
இந்த காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் பதிய வைத்து தமிழ் மக்களின் கண்ணீரை துடைத்துள்ளதற்கு தமிழக விவசாயிகளின் சார்பில் பாராட்டி நன்றித் தெரிவிக்க விரும்புவதாகவும் அதற்கான விழா ஒன்றினை நடத்துவதற்கு முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் அதில் முதல்வர் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.
அதை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா 7.3.2013 அன்று தஞ்சாவூரில் இந்த நன்றி விழாவினை நடத்திட அனுமதி அளித்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.