Breaking News
recent

பள்ளிகளில் ‘ஓபன் புக்’வருகிறது: புதிய நடைமுறை!



வரும் கல்வியாண்டில் பள்ளிகளில் 9, 10, 11, 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக  ‘ஓபன் புக்’ என்ற புதிய நடைமுறையை மத்திய செகண்டரி கல்வி போர்டு (சிபிஎஸ்இ) அறிமுகப்படுத்த உள்ளது.

    தேர்வின்போது புத்தகத்தை எடுத்துப்போய் விரித்துவைத்து அதைப் பார்த்து விடை எழுதுவதுதான் ‘ஓபன் புக்’ முறை என்று நினைத்தால், உங்கள் நினைப்பை மாற்றிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பாடத்திலும்  தொடர்புடைய சில கேஸ் ஸ்டடீஸை (நிகழ் சம்பவங்கள்), தேர்வு நடைபெறுவதற்கு மூன்று, நான்கு மாதங்களுக்கு முன்பே மாணவர்களுக்கு வழங்குவார்கள். மாணவர்கள் அவற்றை நன்கு புரிந்து படித்து வைத்துக் கொள்ளவேண்டும். 

தேர்வின்போது, அந்த கேஸ் ஸ்டடீஸிலிருந்து மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்படும். இதற்கு 20 சதவீதம் மதிப்பெண்கள் வழங்கப்படும். 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, அனைத்துப் பாடங்களிலும் இந்த ‘ஓபன் புக்’ முறை அறிமுகப்படுத்தப்படும். பிளஸ் டூ நிலையில், உயிரியல், பொருளாதாரம், புவியியல் மற்றும் மொழிப் பாடங்களில் இந்த முறை அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட கருத்தாக்கத்தைப் புரிந்துகொண்டு, அதை சரியாகப் பொருத்திப் பார்க்கும் திறனை மாணவர்களிடையே மேம்படுத்தும் நோக்கில் ‘ஓபன் புக்’ முறை அறிமுகப்படுத்தப்படுகிறது..
அதிரை குரல்

அதிரை குரல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.