அதிரை அருகே பிலால் நகர் பெட்ரோல் பங்கிலிருந்து பெட்ரோல் போட்டுவிட்டு வெளியே வந்த பைக் மீது நாகபட்டினத்திலிருந்து தூத்துக்குடி நோக்கி சென்றுக்கொண்டுயிருந்த மினி லாரி பயங்கரமாக மோதியது. இதில் பைக்கில் சென்ற இருவர் தூக்கி வீசப்பட்டனர்,மேலும் லாரி அருகே இருந்த வாய்க்காலில் கவிந்தது.
உடனே அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாம் அதிரை காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபொழுது "தற்போதைக்கு இது பற்றி எங்களால் எதுவும் சொல்ல இயலாது. இது தொடர்பாக நாம் விசாரனையை துவங்கியுள்ளோம் விரைவில் முழு விபரம் தெரியவரும்" என்று கூறினர்.அதிரையில் சமிபகாலமாக நடக்கும் இது போன்ற விபத்துகள் நமது பொதுமக்களிடையே கவலையை ஏற்ப்படுத்தி உள்ளது.
நன்றி:அதிரை எக்ஸ்பிரஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்