சென்னை மாநகராட்சி பகுதியில் கட்டிடம் கட்டுபவர்கள் கட்டிட வரை பட அனுமதிக்காக, ஒரு மாதத்துக்கு மேல் காத்திருக்கும் நிலை உள்ளது. இந்த நிலையில் வரைபட அனுமதியை 7 நாட்களில் பெறும் ‘பசுமை வழி’ என்ற புதிய திட்டம் இன்று அமல்படுத்தப்பட்டள்ளது. இதை மேயர் சைதை துரை சாமி இன்று தொடங்கி வைத்தார்.
இந்த முறைப்படி, கட்டிடம் கட்டுபவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால், அவர்களுக்கு உடனடியாக அதற்கான அத்தாட்சி சான்றிதழ் வழங்கப்படும். அதை பெற்றதற்கான தகவல் எஸ்.எம்.எஸ். மூலமும் தெரிவிக்கப்படும்.
சம்பந்தப்பட்ட இடங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். கட்டிட விதி முறைக்கு ஏற்ப ஆவணங்கள் இருந்தால் விண்ணப்பித்தவர்களுக்கு 7 நாட்களுக்குள் வரைபட அனுமதி வழங்கப்படும்.
கடலோர ஒழுங்கு முறை மண்டலம் மற்றும் நிலத்தடி நீர் பிடிப்பு பகுதியில் உள்ள மனைகள், ரெயில்வே எல்லையில் இருந்து 30 மீட்டருக்குள் இருக்கும் மனைகள், மெட்ரோ ரெயில் பாதையில் இருந்து 50 மீட்டருக்குள் இருக்கும் மனைகளுக்கு இந்த முறையில் விண்ணப்பிக்க முடியாது. இந்த புதிய முறையில் விண்ணப்பிக்கும் மனைகள் காலியாக இருக்க வேண்டும்.
நிகழ்ச்சியில் துணை மேயர், பெஞ்சமின், கமிஷனர் விக்ரம் கபூர் ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்