அதிராம்பட்டினம் பகுதியில் திருடிய வாகன கொள்ளையன் சிக்கினான்!

பேராவூரணி போலீசார் பூங்கொல்லை 4 ரோடு என்ற இடத்தில் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் வந்த மோட்டார் சைக்கிளுக்கான ஆவணச்சான்று எதுவும் இல்லை என்று தெரிய வந்தது. மேலும், அது திருட்டு மோட்டார் சைக்கிள் என்று தெரிய வந்தது.
அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அந்த வாலிபர் காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மணல்மேடு குடி ஆகிய இடங்களில் 15 மோட்டார் சைக்கிள்களை திருடி விற்று இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த வாலிபரை அழைத்து சென்று அவர் திருடிய 15 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டனர். இதன் மதிப்பு ரூ.6 லட்சம் என கூறப்படுகிறது. அந்த வாலிபர் பேராவூரணி அருகே உள்ள நெல்லியடிக்காடு என்ற இடத்தை சேர்ந்த ராஜாராம் (28) என்று தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, பட்டுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Unknown

Unknown

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.