Breaking News
recent

இரத்த தானம்: உண்மை சம்பவம் - டாக்ட‌ர் ஹிமானா சைய‌த்

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் சிங்கப்பூரிலிருந்து சென்னை சென்று அங்கிருந்து பர்வீன் பஸ் மூலம் சித்தார்கோட்டைக்குச் சென்றேன்.எஸ்.ஆர்.எம். காலேஜ் ஸ்டாப்பில் ஒரு 18 அல்லது 19 வயதுடைய ஒரு முஸ்லிம் இளைஞர் பஸ்ஸில் ஏறினார்.
பஸ் புறப்பட்டதிலிருந்து அந்த இளைஞர் பரபரப்புடன் பல பேருக்கு போன் செய்துகொண்டு வந்தார். அவரது உரையாடலிலிருந்து அவர் யாருக்கோ, இரத்தம் கொடுப்பதற்காக பல இடங்களுக்கும் போன் செய்து கொண்டிருக்கிறார். என்று புரிந்தது. 
இரவு 1 மணிவரை முயன்றதில் ஒரு பாட்டல் கிடைத்த தகவல்...காலை 3 மணிக்கு மேலும் இரு பாட்டல்கள் கிடைத்த செய்தி.... உடனே அவர்கள் அனைவரையும் மதுரை மீனாட்சி மருத்துவமனைக்கு விரைந்து போகச் செய்துவிட்டுத்தான் அவர் கண்ணயர்ந்தார். 
என்னை விட என் இளைய தலைமுறை சிறப்பாகச் செயல்படுகிறது என்பதில் எனக்குப் பெருமை.... தம்பிகளே,கருத்து வேறுபாடுகளால் - கட்சி வேறுபாடுகளால் -அதன் வழி விவாதங்களால் - காலத்தை வீணாக்காமல் நற்செயல்களில் ஈடுபடுங்கள். கூலி கொடுப்பவர்கள் மனிதர்கள் அல்ல.... நம்மைப் படைத்த அல்லாஹ்தான்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.