அதிரை மக்களுக்கு நல்ல செய்தி!

தஞ்சை நகராட்சியில் குறுந்தகவல் புகார் மையம் 

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகையிலும், கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மனுதாரர்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்) மூலம் புகார் அனுப்பும் முறை தமிழகத்தில் உள்ள நகராட்சிகளிலேயே முதன்முறையாக தஞ்சை நகராட்சியில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதன்படி தஞ்சை நகராட்சி அலுவலகத்தில் குறுந்தகவல் புகார் மையம் தொடங்கப்பட்டுள்ளது.இந்த புகார் மையத்தை அமைச்சர் வைத்திலிங்கம் தொடங்கி வைத்தார். 

புகார் பதிவு செய்ததற்கு ஒப்புகை எண் குறுந்தகவல் மூலம் வழங்கப்படும். கோரிக்கை நிறைவேற்றப்பட்ட விவரம் மனுதாரருக்கு குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும். புகார் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை விவரத்தை நகராட்சி இணையதளம் www.municipality.tn.gov.in/thanjavur மூலம் தெரிந்து கொள்ளலாம். புகார் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்படாமல் இருந்தால் புகாருக்கான ஒப்புகை எண்ணை குறிப்பிட்டு தொடர்புடைய அலுவலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தீர்வு காணலாம். 

தஞ்சை மருத்துவ மணைகளில் பிறந்த குழந்தைகளின் பிறப்பு சான்றிதழுக்காகவும் இன்னும் பல வேலைகளுக்காவும் தினந்தோறும் பல அதிரையர்கள் தஞ்சை நகராட்சிக்கு அலைந்தும் வேலை முடியாமல் திரும்பி வருகிறார்கள் அவர்களுக்கும் இந்த செய்தி நல்ல செய்திதான்!
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.