102 ஆதரவற்றவர்களுக்கு பிரியாணி விருந்து படைத்த சென்னை நண்பன்



தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சென்னை நண்பன் இதழ் சார்பாக 102 ஆதரவற்றவர்களுக்கு பிரியாணி விருந்தளிக்கப்பட்டது. சென்னை, செங்குன்றம் மொண்டியம்மன் நகரில் அமைந்துள்ள அன்னை பாரத மாதா கல்வி அறக்கட்டளையில் 102 குழந்தைகள், முதியோர்களுக்கு மதியம் பிரியாணி வழங்க சென்னை நண்பன் இதழ் ஏற்பாடு செய்திருந்தது. 

ஏழைகளுக்கும் உணவளிக்கும் வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் ஞாயிறு மதியம் 12 மணி முதல் 1 மணி வரை விருந்தளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மஸ்ஜிதே ஆயிஷா தலைமை இமாம் மௌலவி ஏ.காஜா மொய்னுத்தீன் ஜமாலி தலைமை தாங்க, சென்னை நண்பன் இதழ் ஆசிரியர் நண்பன் அபூபக்கர் வரவேற்புரையாற்ற, அம்ரத் ஜுவல்லரி ரமேஷ், செங்குன்றம் தெற்கு வியாபாரி சங்கச் செயலாளர் ஏ.கே. முகம்மது யூசுப், பெஸ்ட் ரெடிமேட்ஸ் ஆஷிக், எம்.பி. அப்துல் ரஹ்மான், சமியுல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநிலத் தலைவர் டிஎஸ்ஆர் சுபாஷ், கோஜான் பொறியியல் கல்லூரி குழுமத்தின் செயலர் இரா.ஏ.பாபு, செங்குன்றம் தமிழ்ச் சங்கத் தலைவர் என்.சந்திரசேகர், திராவிடமணி, அயன்புரம் பாபு, ஆவடி பி.கே. மூர்த்தி, அல்லாபக் ஷ், உளவுப்பார்வை ஆசிரியர் ரமேஷ் குமார், வாசன் பார்வை ஆசிரியர் செல்லப் பாண்டியன், தாய்மை சமூக அறக்கட்டளை தலைவர் ஆர்.அன்பழகன், ராம்ஜி கண் மருத்துவமனை ரவிவர்மா, புதிய எருமைவெட்டிப்பாளையம் பள்ளித் தலைமையாசிரியர் எஸ்.சங்கரலிங்கம், செங்குன்றம் முரசு ஆசிரியர் மாற்கு, கேப்டன் டிவி ஸ்மைல் ரஞ்சித் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சென்னை இதழ் துணை ஆசிரியர் ஜே.முகம்மது அப்துல் காதர் நன்றி தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க ஆலோசகர் ஆவடியை சேர்ந்த பி.கே.மூர்த்தி அனாதை இல்லத்திற்கு ரூ. 3000 நன்கொடை வழங்கினார். இந்நிகழ்ச்சி ஒத்துழைப்பு நல்கிய அனாதை இல்ல நிர்வாகி அனுஷ்யா அண்ணாச்சிக்கு சென்னை நண்பன் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
Unknown

Unknown

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.