procademia.com வேலைக்கு வழிகாட்டும் இணையதளம்

பணி தேடுபவர்களையும், நிறுவனங்களையும் இணைக்கும் இணையதளம் ஒன்றை எம்.எஸ்.எம்.இ எனப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவனமும், தனியார் நிறுவனம் ஒன்றும் இணைந்து உருவாக்கியுள்ளன.

நிறுவனங்கள், மாணவர்களை மட்டுமின்றி கல்வியாளர்களையும் www.procademia.com என்ற இணைய தளம் மூலம் இணைப்பதாக அதன் நிறுவனர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறு ஒரே சமூக தளத்தில் இணைப்பதன் மூலம் சரியான நிறுவனத்தையோ, நபர்களையோ தேர்ந்தெடுக்க எளிதாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பணி தேடுபவர்களின் அனுபவம் முதல் அவர்களது ஆய்வுதிட்டங்களை பதிவேற்றம் செய்வதற்கான வசதிகளும் இந்த இணைய தளத்தில் உள்ளது.

மேலும், இதில் இணைந்திருக்கும் கல்வியாளர்கள் மூலம் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் இந்த இணைய தளம் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Unknown

Unknown

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.