Breaking News
recent

ஏரி ஆக்கிரமிப்பை பார்வையிட்டு கலெக்டர் திடீர் ஆய்வு!

பட்டுக்கோட்டை பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஓடைக்கரை ஏரியினை ஆக்கிரமித்து தனியார் பள்ளி மதில் சுவர் கட்டுவதாக எழுந்த புகாரினை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சுப்பையன் திடீரென பட்டுக்கோட்டையில் ஆய்வு செய்தார்.
மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் தர்மராஜன், நகர்மன்ற தலைவர் ஜவகர்பாபு உள்பட வருவாய் துறை, பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆய்வில் மணிகூண்டு பகுதியில் கட்டப்படும் சிறு பாலம், மருத்துவமனையின் சுகாதாரக்கேடு ஆய்வு செய்யப்பட்டது, ஆய்வில் பணி மருத்துவர் நீயூட்டன் மட்டுமே பணியில் இருந்தார். தலைமை மருத்துவர் மற்றும் மற்ற மருத்துவர்கள் பணியில் இல்லை, மாவட்ட கலெக்டரின் வருகை தகவல் தெரிவிக்கப்பட்டு அதன் பிறகே வந்தனர்.
இதைத்தொடர்ந்து பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் கழிவறை பகுதிகள், நாடியம்மன் கோவில் நடை பாதை பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்விற்கு வந்த மாவட்ட கலெக்டர், பொதுப் பணித்துறை அதிகாரிகளை அழைத்து பண்ணவயல் சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஓடையார் குளத்தின் ஆக்கிரமிப்பு பகுதிகளை ஆய்வு செய்தார்.
எந்த அறிவிப்பும் இன்றி கட்டப்பட்ட நீண்ட மதில் சுவரினை ஆய்வு செய்தவர் நாளையே சர்வே செய்து ஆக்கிரமிப்பு இருக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரி இக்பாலுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து லாரிகள் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடத்தினை நகராட்சி அதிகாரிகள் உடனடியாக சுத்தப்படுத்தி லாரிகள் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி பொறியாளருக்கு உத்தரவிட்டார். அப்போது இந்த பகுதியின் மழைநீர் வடிகால் குளத்தினை தூர்த்து ஆக்கிரமித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.