Breaking News
recent

அல் அமீன் பள்ளிவாசல் கட்டுவது சம்மந்தமான கூட்டமும் அதன் தீர்மானங்களும்!

கடந்து 13-12-13 அன்று அஸர் தொழுக்கைக்கு பின் 4:30 மணியளவில், அல் அமீன் ஜாமிஆ (பஸ் ஸ்டாண்டு) பள்ளியில் பள்ளிவாசல் கட்டுமானம் குறித்த ஆலோசனை-மசூரா நடைபெற்றது.

மெளலானா ஏ.எஸ். அகமது இப்ராகிம் அவர்களின் தலைமையிலும் ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கத்தின் நல்லிணக்க குழுவினர் 35 நபர்களின் முன்னிலையிலும் இந்த ஆலோசனைக் கூட்டம் சிறப்பான முறையில் நடந்தேரியது.

வணிகர்கள்-வியாபாரிகளிடமும், சாயக்காரத் தெரு வாசிகளிடமும், டாக்ஸி ஸ்டாண்டு சகோதரர்களிடமும் கட்டிட கமிட்டி நிர்வாகத்தால் நியமிக்க அவரவர்களின் பிரதிநிதிகளை  கேட்கப்பட்டது, பள்ளி நிலம் ஆக்கிரமிப்பு மற்றும் இதர விசயங்களும் ஆலோசிக்கபட்டது.ஆலோசனையின் முடிவாக பின்வரும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது!

1) கோர்ட் தீர்ப்புபடி முறையாக - பட்டாவில் உள்ளபடி அளந்து, சர்வேயர் சொல்கிற அளவின் படி முடிவு செய்வது.

2) வணிகர்கள்- வியாபாரிகள் கமிட்டியை நிர்வாகத்தால் அமைத்துக் கொடுப்பது (7 முதல் 10 நபர்கள்).

3) ஜனாப் அப்துல் ஜப்பார் (கறிக்கடை) அவர்கள் தலைமையில் சாயக்கார தெரு கமிட்டியை நிர்வாகத்தால் அமைத்துக் கொடுப்பது (4 நபர்கள்).

4) டாக்ஸி ஸ்டாண்டு கமிட்டியை நிர்வாகத்தால் அமைத்துக் கொடுப்பது (2 அல்லது 3 நபர்கள்).

5) நில அளவை - சர்வே செய்வதற்கு ஜனாப், ஷம்சுல் இஸ்லாம் சங்க முன்னால் செயலாளர்  எம்.பி. அபுபக்கர் அவர்கள் த்லைமையில் தனி கமிட்டு அமைப்பது.

6) நமதூரில் இருக்கும் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் ஒன்பது, மஹல்லா ஜமாஅத்தார்களுக்கும் முறையாக கடிதம் எழுதி, அந்தந்த ஜமாத் பிரிதிநிதிகளை கேட்பது. அத்துடன், ஊர் ஒன்று பட்டு கட்டிட கமிட்டியை (நிர்வாகத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு) அமைப்பது எனவும் இன்னும் வெளிநாட்டுவாழ் அதிரையர்களைக் கொண்ட பிரிதிநிதிகளை தேர்வுசெய்யுமாறு, கடிதம் அனுப்புவது எனவும் இந்த மசூரா - ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டது! அல்ஹம்துலில்லாஹ்!!

இந்த ஆலோசனைகளுக்கு பின்பு ஹிமாயத்துல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளின் ஆலோசனை நடந்தது. இதில், ”மேற்கண்ட தீர்மானங்களை இந்த நிர்வாக சபை ஏற்றுக்கொள்கிறது” என தீர்மாணம் செய்யப்ப்பட்டது.
அத்துடன், நமதூரில் நம்மோடு சகோதர வாஞ்சையோடு, கலந்து வாழும் மாற்றுமத அன்பர்களின் பஞ்சாயத்தார்களுக்கு நல்லிணக்க முறையில் கடிதம் எழுதுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அந்த பஞ்சாயாத்துகள் பின்வருமாறு:
1) கரையூர் தெரு - பஞ்சாயத்தார்கள்,
2) சுன்னாம்புக் காரத்தெரு - பஞ்சாயத்தார்கள்,
3) பழஞ்செட்டி தெரு- பஞ்சாயத்தார்கள்,
4) பிள்ளைமார்கள் தெரு - பஞ்சாயத்தார்கள்,
5) யாதவர் தெரு - பஞ்சாயத்தார்கள்,
6) முத்தம்மாள் தெரு (முத்தகம்) - பஞ்சாயத்தார்கள்,
7) செட்டித் தோப்பு - ஆதிதிராவிடர் காலணி - பஞ்சாயத்தார்கள்,
8) வாழைக் கொல்லை - பஞ்சாயத்தார்கள்,
9) வள்ளியம்மை நகர்- பஞ்சாயத்தார்கள்,
10) காந்தி நகர் - பஞ்சாயத்தார்கள்,
11) ஆறு மா கிட்டங்கித் தெரு - பஞ்சாயத்தார்கள்,


சர்வே கமிட்டி நபர்கள்:

1) எம்.பி. அபூபக்கர் அவர்கள் - நடுத்தெரு (முன்னாள் செயலாளர், ஷம்சுல் இஸ்லாம் சங்கம்)

2) இ. இஷாக் அவர்கள்- புதுத்தெரு (மிஷ்கின் பள்ளி தலைவர்)

3) எம்.ஏ. ஹனிஃபா அவர்கள்- புதுத்தெரு வடபுறம், (முன்னால் துலுக்கா (தக்வா) பள்ளி டிரஸ்ட் செயளாலர்)

4) எம்.கே.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்கள் - நடுத்தெரு,

5) எஸ்.அஹமது ஹாஜா அவர்கள்- தரகர் தெரு, (ஆசாத் நகர்)

6) எம்.எம்.எஸ். அன்வர் அவர்கள்- மேலத்தெரு ( முன்னால் அதிரைப் பேரூராட்சி பெருந் தலைவர்,சாச்சா ஜனாப் எம்.எம்.எஸ். அப்துல் வஹாப் அவர்களின் மகன்)

7) ஏ.சேக் நூருதீன் (தீன் மெடிக்கல்ஸ்) அவர்கள்- கடற்கரைத் தெரு,

8) த.நவாஸ்( மேலத்தெரு முருக்கி பெயரன்) அவர்கள் - புதுத் தெரு  / கீழக்கு பகுதி,

9) எஸ். சாஹுல் ஹமீது அவர்கள் - சாயக்கார தெரு,

10) எம்.தமீம் அன்சாரி அவர்கள் - சாயக்கார தெரு,

11) தாஜுதீன் ( வருசப்பா வீடு) அவர்கள்- புதுத் தெரு / கீழக்கு பகுதி,

12) அப்துல் ஜப்பார் (கறிக்கடை)  அவர்கள் - சாயக்கார தெரு,
மேற்கண்ட நபர்களை கொண்ட கமிட்டி, நிலங்களை அளந்து பள்ளிக்குள்ள இடத்தை பள்ளிக்கும், சாயக்கார தெருவில் பள்ளியின் மேற்குபக்கம் (கிப்லா பக்கம்) உள்ள 4 வீட்டின் கொல்லைபுறம் அவர்களுக்கு சேருமானால், அவர்களிடம் ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டது!
மேற்கண்ட தீர்மாணங்கள் சுமுகமாக தீர துஆச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்!!
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.