அதிரையில் தொடர் சாலை விபத்து, தீ விபத்துகள்...

அதிரையில் சமீபகாலமாக தொடர் வாகன விபத்துகள் ஏற்பட்டுவருகின்றது, அதுபோல் தீ விபத்துகளும் நடந்து வருகிறது. விபத்திற்கு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் அதிரையில் இல்லை. அரசு மருத்துவமனையும் 24 மணிநேரமும் இயங்கவில்லை. தீ விபத்தின் கோரபிடியிலிருந்து மீள அதிரையில் தீ அணைப்பு நிலையமும் இல்லை.
சம்பவம் நடக்கும் போது ஒவ்வொரு முறையும் இந்த கோரிக்கை எழும்...பின்பு இந்த கோரிக்கை நீர்த்துப்போகும்! இதுதான் அதிரையில் காலம் காலமாக இருந்துவரும் நிலை.

இந்தநிலையில்தான்... அதிரை SDPI கிளை சார்பாக 22-11-13 அன்று மாலை 4:30 மணிக்கு அதிரை பேருந்து நிலையத்தில்,
அதிரைக்கு 108 ஆம்புலன்ஸ் வேண்டும்
அதிரைக்கு தீ அணைப்பு நிலையம் வேண்டும்
அதிரை அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படவேண்டும் 
ஆகிய மூன்றுஅம்ச கோரிக்கையை அமல்படுத்த கோரி ஆர்பாட்டம் நடத்த உள்ளது.

Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.