Breaking News
recent

கிருஷ்ணகிரியில் தமுமுக மதநல்லிணக்க விழா

கிருஷ்ணகிரியில் தமுமுக மதநல்லிணக்க விழா


கிருஷ்ணகிரி, மார்ச் 29: கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மத நல்லிணக்க விழா கிருஷ்ணகிரி கார்னேஷன் திடலில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் முகமது ஆரிப் தலைமை தாங்கினார். பிரமுகர்கள் ஜமீல் அகமத், முகமத் சாதிக், சம்சுதீன், ஜானிபாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜவாஹிருல்லா, மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் தமிமுன் அன்சாரி, ரிபாயி, மாநில மனித உரிமை செயலாளர் அன்வர், மாவட்ட செயலாளர் நவ்ஷாத் ஆகியோர் பேசினர்.

கிருஷ்ணகிரி வழியாக ரயில் பாதை அமைக்க வேண்டும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். காவேரிப்பட்டணம் அருகேயுள்ள அகரம் பள்ளிவாசலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

தளி உருது நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.