த த ஜ பொதுக்குழு, இதை எதிர்பார்க்கவில்லை???
த த ஜ பொதுக்குழு யாரும் எதிர்பார்க்காத பல முடிவுகளை எடுத்து அசத்தி இருக்கிறது.பாராட்டப்பபடவேண்டியவைகள்.ஆனால் அதிர்ச்சி தரும்,முஸ்லிம்கள் ஒற்றுமை பிறக்க வழி இன்றி போய்விடுமோ என அஞ்சும் வகையில் ஒரு தீர்மானம் போட்டு நம் எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார்கள்.
அந்த தீர்மானம் இதோ: மனித நேய மக்கள் கட்சி எங்கு நின்று போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக அவர்களின் சமுதாய துரோகங்களை அடையாளம் காட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் களம் இறங்கி அவர்களை தோல்வியை தழுவச் செய்யும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
ஏன் இந்த நிலை?உண்மையிலேயே அப்படி ம ம க நடந்துள்ளதா?அப்படி இருக்க வாய்ப்பில்லை என்பதுதான் என் போன்றோரின் தனிப்பட்ட கருத்தாகும்.அப்படி ஒருக்கால் இருக்குமானால்,அழைத்துப் பேசினால்-சரியாகிவிடும. அதை விடுத்து,இப்படி நமக்குள் சண்டை மூட்டிக்கொண்டிருந்தால் நிச்சயம் நமக்கு லாபமல்ல.
ஒன்று மட்டும் விளங்குகிறது.தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் மூடத்தனம்,அறியாமை,இஸ்லாத்திற்கு எதிரான பழக்க வழக்க முறைகளை அகற்றி,உண்மையான இஸ்லாம்,குரானும்,ஹதீசும் தான் என தன் பிரச்சாரம் மூலம்,அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் புரட்சி செய்து வரும் சகோ பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள்,த த ஜ வை விட்டு விலகி இல்லாமல்,மீண்டும் தலைமை பொறுப்பேற்று,வழி நடத்தினால் இன்ஷா அல்லாஹ் இது போன்று இனி நடவாது.வேறு என்ன சொல்ல?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்