Breaking News
recent

அதிமுக கூட்டணியில் பாஜக!மமக,தமுமுக,கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை என்ன?

தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள் சிதறிப் போவதில் உடன்பாடில்லை என்று பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.  சென்னையை அடுத்த தாம்பரத்தில் வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கும் பணி, அந்தத் தொகுதியின் தேர்தல் பணி ஆகியவற்றை இல. கணேசன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.அதன்பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:  

அவசரநிலை பிரகடன காலத்தில் இருந்தநிலை தமிழ்நாட்டில் இப்போது உருவாகி உள்ளது.திமுக ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க விரும்பும் மக்கள், கொள்கை ரீதியாக மாறுபட்ட கட்சிகள் அனைத்தும் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒரே நோக்குடன்,வாக்குகள் சிதறாவண்ணம் ஓரணியில் திரள வேண்டும் என்று கருதுகிறார்கள்.  

எங்களுக்கும் திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறிப் போவதில் உடன்பாடு இல்லைதான். அ.தி.மு.க. கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இருப்பது தர்ம சங்கடத்தை உருவாக்காது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.  

அவசரநிலை பிரகடனத்தின்போது, இந்திராகாந்தியின் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒரே நோக்குடன், கொள்கைகளால் வேறுபட்ட இந்திய கம்யூனிஸ்ட், ஜனசங்கம் ஆகியவற்றுடன் ஜனதா கட்சி ஓரணியில் இணைந்து தேர்தலைச் சந்தித்து காங்கிரûஸயும் வீழ்த்தியது. இதை நினைவுகூர விரும்புகிறேன்.


எனது பிறந்தநாளுக்கு முதல்வர் கருணாநிதி நேரில் வந்து வாழ்த்தியதில் அரசியல் இருப்பதாக நான் கருதவில்லை என்றார் இல.கணேசன்.  பா.ஜ.க.வின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேத.அ.சுப்பிரமணியன், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் கே.டி.ராகவன், பொற்றாமரை சங்கரன், தாம்பரம் நகர தலைவர் ராஜாமணி அய்யர், மாவட்ட ஆடிட்டர் பிரிவு தலைவர் ஆர்.எஸ்.பாலாஜி, பொதுக்குழு உறுப்பினர் டி.மணி,சித்ரா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நன்றி: தினமணி

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் அதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா, பொதுச் செயலளார் எஸ்.ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யு. ரஹ்மதுல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத் ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, அதிமுக தலைமை நிலையச் செயலாளர்  கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆகியோரும் உடன் இருந்தனர்.

அப்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி  தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவது என இரு கட்சிகளுக்கு இடையே கையெழுத்தானது.

 மேலும் புதுவை சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு இடம் அளிக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா உறுதி அளித்தார்.
நன்றி: TMMK

Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.