Breaking News
recent

வாக்காளர் பட்டியல் திருத்தம்

தமிழக சட்டசபைக்கான வாக்காளர்ப் பட்டியல்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: எதிர் வரும் 2012 ஜனவரி முதல் நாளை தகுதி நாளாக கொண்டு தமிழக சட்டசபைக்கான வாக்காளர் பட்டியல்களில் திருத்தம் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டுக்கான அடிப்படை வாக்காளர் பட்டியல் மற்றும் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட இரு துணை வாக்காளர் பட்டியல்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட மூன்றாவது துணை வாக்காளர் பட்டியல் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து சட்டசபை தொகுதி வாரியாக நாளை 24ம் தேதி அன்று மாவட்ட தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும்.
டிசம்பர் 31ம் தேதி 1993 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ பிறந்துள்ள புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கான சட்டசபை தேர்தலுக்கான வாக்குச்சாவடி மையத்தில் செயல்படும் வரையறுக்கப்பட்ட மையத்தில் எதிர்வரும் 24ம் தேதி முதல் எட்டாம் தேதி நவம்பர் மாதம் வரையிலான நாட்களில் வரையறுக்கப்பட்ட அலுவலரிடம் இருந்து உரிய படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம்.
அதே வேளையில் வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள பெயர்களை திருத்தம் செய்யவோ அல்லது நீக்கம் செய்யவோ விரும்பும் வாக்காளர்களும் உரிய படிவத்தில் வரையறுக்கப்பட்ட அலுவலர்களிடம் அளிக்கலாம்.
மேலும் வரும் அக்டோபர் 30ம் தேதி மற்றும் நவம்பர் ஆறாம் தேதி ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாவட்டத்தில் உள்ள வரையறுக்கப்பட்ட மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தி சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் கோரும் படிவங்களைப் பெற்றிடவும் வகை செய்யப்பட்டுள்ளது.
அனைத்து வரையறுக்கப்பட்ட மையங்களிலும் தேவையான படவடிவங்கள் மற்றும் தொடர்புடைய பாகத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வைக்காக தொடர்புடைய வரையறுக்கப்பட்ட அலுவலர்கள் வசம் அளிக்கப்படவுள்ளன.
பொது மக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.