Breaking News
recent

கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் முகாம் இன்றும் செக்கடி மேட்டில் நடக்கிறது!

1ஆம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவ,மாணவிகளுக்கு மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறை முலம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. இந்த ஆண்டும் அதிரையில் கல்வி உதவித் தொகை  பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தலும் அதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியும் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்றது.
இது வரை பலநூறு விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.  மக்களின் கோரிக்கை ஏற்று இன்றும் (09/07/12) திங்கட்கிழமை செக்கடி மேட்டில் இருக்கும் PFI மாவட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதனை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று PFI அதிரை நகரத் தலைவர் சலீம் கேட்டுக்கொண்டார்.



கல்வி உதவித்தொகை பெறத் தகுதிகள்
1. மாணவ /மாணவியரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.  
2. மாணவ /மாணவியரின் முந்தைய மதிப்பெண் 50௦% சதவிதத்திற்கு மேல் இருக்க வேண்டும்.
3. ஒரு குடும்பத்தில்  இரண்டு மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க வரும்போது கண்டிப்பாக கொண்டுவர வேண்டியவைகள்:
1. முகவரிச் சான்றிதழ் நகல் (ரேசன் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை)
2. மாணவ /மாணவியரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு 
3. சாதிச் சான்றிதழ் நகல்
4. வருமானவரிச் சான்று அல்லது ரூ.10 மதிப்புள்ள நிதிமன்ற சாரா முத்திரை தாளில்  மாணவ /மாணவியரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் உறுதி பிரமாண பத்திரம்.
5. மாணவ /மாணவியரின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி சேமிப்பு  கணக்கின் நகல்.
தொடர்புக்கு: 9842716214,9042455496. 
நிகழ்ச்சி நடைபெறும் இடம்:
SDPI  அலுவலகம் அருகில்,
செக்கடிமேடு, நடுத்தெரு 
அதிரை 




Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.