Breaking News
recent

அதிரையில் வலைஞர்கள் சந்திப்பு - 22-08-2012


கடந்த 22-08-2012 அன்று அதிரைநிருபரின் பங்களிப்பாளர் எங்கள் மூத்த சகோதரர் இபுராஹீம் அன்சாரி அவர்களின் இல்லத்தில் மாலை 05:00 மணி முதல் 06:30 வரை நடைபெற்றது. இந்த அதிரை வலைஞர்கள் சந்திப்பில் அதிரை வலைத்தளங்களின் முக்கிய பங்களிப்பாளர்கள் பங்கேற்று தங்களின் கருத்துக்களையும் அனுவபங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் மூத்த வலைஞர்கள் அதிரை அஹமது, அதிரை ஜமீல் M.சாலிஹ், இபுராஹீம் அன்சாரி, S.அலாவுதீன் இவர்களுடன் இணைந்து M.S.M.நெய்னா முஹம்மது, அபுஈஸா, L.M.S.அபூபக்கர், A.R.ஹிதாயத்துல்லாஹ், சேக்கன்னா M.நிஜாம், ஹஸன், S.ஹமீத், M.தாஜுதீன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.


மூத்த வலைஞர் சகோதரர் ஜமீல் அவர்கள் அதிரைநிருபர் மற்றும் அதிரை எக்ஸ்பிரஸ் தளங்களின் செயல்பாடுகள் பற்றி அனுபவப்பூர்வமான நல்ல ஆலோசனைகளை வழங்கியதோடு அல்லாமல், பத்திரிகைதுறை தொடர்பான அறிய பல தகவல்களை இளம் வலைஞர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். அதிரை வலைஞர்களிடம் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் என்ற கருத்தை மிக ஆழமாக எடுத்துரைத்தார்கள். அதிரைக்கு என்று ஓர் அச்சுப் பத்திரிக்கை உருவாக வேண்டும் என்று தனது கோரிக்கையை அதிரை வலைஞர்களிடம் வைத்தது, இதற்காக தானும் அதிரை அஹமது அவர்களும் பக்கபலமாக இருந்து முழு ஒத்துழைப்பு தருவதாக சொன்னது இந்த சந்திப்பின் முக்கிய சிறப்பு என்று சொல்லலாம்.

மூத்த வலைஞர் சகோதரர் அதிரை அஹமது அவர்கள் தங்களின் கருத்தை மிகப் பொருமையாக எடுத்து வைத்தார்கள். ஊடகத்துறையில் உள்ளவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடாது, நிதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்று அனைவருக்கும் ஏற்ற இதமான அறிவுரையை வழங்கினார்கள். மேலும் சில வருடங்களுக்கு முன்பு வலைஞர்களிடம் ஒற்றுமை ஏற்பட எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றி பகிர்ந்து கொண்டார்கள்.

சகோதரர் MSM நெய்னா அவர்கள், எல்லோரும் தங்களின் இளம் வயதில் ஏற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவங்களை பதிவுகளாக எழுத வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

அதிரைநிருபரின் மூத்த பங்களிப்பாளர்கள் சகோதரர்கள் அதிரை அஹமது, இபுராஹீம் அன்சாரி, அலாவுதீன் மற்றும் அனைவரின் ஆக்கங்கள் மிக சிறப்பாக உள்ளதாக அனைவரும் பாராட்டினர். மேலும் அதிரைநிருபரில் வெளிவந்து எல்லோருடைய பாராட்டையும் பெற்ற சகோதரர் அலாவுதீன் அவர்கள் எழுதிய மிக பிரபலமான "கடன் வாங்கலாம் வாங்க" என்ற தொடர் பதிவையும், மூத்த சகோதரர் இபுறாஹீம் அன்சாரி அவர்களின் "மனுநீதி மனித குலத்துக்கு நீதியா?" அலசல் தொடர் பதிவையும் புத்தகமாக வெளியிட தகுதியானவை என்று மூத்த சகோதரர் ஜமீல் அவர்களும் இன்னும் பிற வலைஞர்களும் சிலாகித்து பாராட்டி சொன்னது முக்கிய சிறப்பம்சமாகும் என்று குறிப்பிட்டு சொல்லலாம்.

இந்த சந்திப்பின் நிகழ்வுகளை சிறிதாக தொகுக்கப்பட்ட கருத்துக்கள் யாவும் விவாதிக்கப்பட்டவைகளே அதிரை வலைத்தளங்களின் செயல்பாடுகளை மேன்படுத்துவதற்கும் புரிந்துணர்வை அதிகரிக்கவும் மட்டுமே அன்றி யாரையும் தாழ்த்தவோ அல்லது உயர்த்தவோ அல்ல.

மூத்த மற்றும் இளம் வலைஞர்களின் இந்த சந்திப்பு மொத்தத்தில் அனைவருக்கும் பயன் தரக்கூடியதாக இருந்தது என்று சொல்லலாம். இது போன்ற அதிரை வலைஞர்களின் சந்திப்பு தொடர்ந்து நடைபெற்றால் புரிந்துணர்வுகள் நம் வலைஞர்கள் மத்தியில் நிலைக்கும் என்று நம்பலாம் இன்ஷா அல்லாஹ்.

Unknown

Unknown

1 கருத்து:

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.