கடற்கரைத்தெரு : இளம் விஞ்ஞானி ‘பிரைட் மீரா’வின் அசத்தும் கண்டுபிடிப்பு [காணொளி] !

அதிரையின் பழமைவாய்ந்த மற்றும் பாரம்பரியமிக்க தெருக்களில் ஒன்றாகிய கடற்கரைத் தெருவைச் சார்ந்த சகோதரர் இளம் விஞ்ஞானி ‘பிரைட் மீரா’ அவர்கள் நமது இந்திய நாட்டின் மீதுள்ள அளவில்லா பற்றுதலை பறைசாற்றும் விதமாக ஒவ்வொரு சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் தனது விடா முயற்சியின் கீழ் பல கண்டுபிடிப்புகளை தனது சொந்த செலவில் உருவாக்கி நமது சமூகத்திற்கு வழங்கி பெருமை சேர்த்து வருகின்றார்.

பொதுமக்கள் மற்றும் ஏராளமான மாணாக்கர்கள் வியப்புடன் இவரின் அசத்தும் கண்டுபிடிப்புகளை கண்டு மகிழ்வது அவருக்கும் மேலும் உற்சாகத்தை தருகின்றது.

இதற்கு அங்கிகாரமாக பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளும், இணையதளங்களும், பத்திரிக்கைகளும் இவற்றை படம்பிடித்து செய்தியாக பரப்பி வருகின்றன.


மேலும் தனது நாட்டை நேசிக்கும் இவரின் மிகுந்த பற்றுதல் காரணமாக “தேசபற்று மிக்கவர்” என்ற விருதும் பெற்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

நமதூருக்கு பெருமைத் தேடித்தந்துகொண்டிருக்கும் சகோ. இளம் விஞ்ஞானி ‘பிரைட் மீரா’ அவர்களுக்கு நாமும் நம்முடைய வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொண்டோம்.



 சேக்கனா M. நிஜாம்
‘அதிரை போஸ்ட்’ ஹிதாயத்துல்லா
‘அதிரை புதியவன்’ ஹசன்
சேக்கனா M. நிஜாம்

சேக்கனா M. நிஜாம்

    1 கருத்து:

    1. அஸ்ஸலாமு அலைக்கும். வித்தியாசமான முயற்சி செய்து ஊடக கவனத்தை இவரின் பக்கம்திருப்புவதில் வெற்றி பெற்று இருக்கிறார்..! வாழ்த்துகள்..!

      அப்புறம்.... //வ.வு.சி அளவுக்கு வசதி இல்லை//யா...???

      சரியாபோச்சு போங்க..!

      அந்த கப்பலை ஓட்டிய 'டிடைவர்' மட்டுமே வ வு சி...!

      "கப்பலை வாங்கி கொடுத்த வள்ளல்" பேரை வேணும்னே வரலாற்றிலே மறைச்சிட்டாங்க...!

      அவங்க மறைச்சாலும் நாம் சொல்ல வேண்டிய நேரத்திலே கரீக்டா சொல்லிடனும்லே...!

      வ.உ.சியின் முயற்சியை - தியாகத்தை மதிக்கும் நம் ஆதங்கமெல்லாம், "கப்பல் ஓட்டிய தமிழனின்" புகழைப் பேசும் போதெல்லாம் "கப்பல் வாங்கித்தந்த தமிழன்" வள்ளல் ஹாஜி. பக்கீர் முகம்மது சேட்டையும் கொஞ்சம் சேர்த்துப் பேசுங்களேன் என்பதுதான்..! :-)))

      பதிலளிநீக்கு

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.