Breaking News
recent

புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்- அமைச்சர் தனிப்பிரிவில் புதிய வலைதளம் cmcell.tn.gov.in : முதல்வர் தொடங்கி வைத்தார்


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
 
ஏழை- எளிய மக்களும், சாமானியர்களும் தங்கள் அடிப்படைத் தேவைகளையும் அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் உரிய முறையில் அவர்களை சென்றடையும் வகையிலும், தங்கள் குறைகளை தெரிவித்து உரிய நிவாரணம் பெறும் நோக்கத்துடனும், முதல் - அமைச்சரின் தனிப்பிரிவு இயங்கி வருகிறது.
 
தற்போது முதல்- அமைச்சரின் தனிப் பிரிவில் நாள்தோறும் பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், அஞ்சல் வழி, மின்னஞ்சல் மற்றும் இதர ஊடகங்கள் வாயிலாகவும் நாளொன்றுக்கு சுமார் 3000 முதல் 3,500 வரை மனுக்கள் பெறப்படுகின்றன. இம்மனுக்கள் தனிக்குறியீடுகள் மூலம் வகைப்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
இப்பிரிவில் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து எடுக்கப்படும் நடவடிக்கைகளினால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.
முதல்- அமைச்சரின் தனிப்பிரிவின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கும் நோக்கில் முதல் - அமைச்சரின் தனிப் பிரிவிற்கு
(http://cmcell.tn.gov.in) என்ற புதிய வலைதளத்தினை முதல் - அமைச்சர் ஜெயலலிதா துவங்கி வைத்தார்.
 
இவ்வலைதளத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீதான ஒப்புகைச்சீட்டு உடனுக்குடன் மனுதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பதிவு எண்ணுடன் அனுப்பி வைக்கப்படும்.
 
புதிய வலைத்தளம் மூலம் பெறப்படும் மனுக்கள், அம்மனு தொடர்புடைய அலுவலகத்திற்கு கணினி மூலம் மாற்றப்பட்டு, அதன் விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். சம்பந்தப்பட்ட அலுவலகத்திலுள்ள முதல் - அமைச்சர் தனிப்பிரிவின் ஒருங்கிணைப்பு அலுவலரின் பெயர் இந்த வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் மனுதாரர் அந்த அலுவலரை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும்.
 
தற்போது அனைவரிடமும் செல்போன் பயன்பாடு அதிகமாக இருப்பதால் முதல் -அமைச்சரின் தனிப்பிரிவில் பெறப்படும் மனுக்களுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலம் மனுதாரர்களுக்கு ஒப்புகை செய்தி அனுப்பும் முறையினை முதல் -அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
 
அஞ்சல் வழியாக அனுப்பப்படும் மனுக்களில் மனுதாரர் தங்களது செல்போன் எண்ணை குறிப்பிட்டிருந்தால் முதல்- அமைச்சரின் தனிப்பிரிவினால் வழங்கப்படும் பதிவு எண், தொடர்புடைய அலுவலகம் மற்றும் அலு வலர் ஆகிய விவரங்கள் முதல் - அமைச்சர் தனிப்பிரிவிலிருந்து குறுந்தகவல் மூலம் மனுதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
 
முதல்- அமைச்சர் ஜெயலலிதா, மருத்துவப் பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய 113 ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவித் தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Unknown

Unknown

2 கருத்துகள்:

  1. பயன்தரும் பதிவு !

    நன்றி நண்பருக்கு !

    பதிலளிநீக்கு
  2. Of course.......... it is a very useful site.................. I sent 9 complaints.............. I got results within 5 days. I am fully satisfied with the performance of cm special cell. It is great success to the Hon'ble CM of Tamilnadu.
    A. Mussam Mill

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.