அதிரை காடுகளில் குவியும் வெளிநாட்டு பறவைகள்!

அதிராம்பட்டினம் : தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இருந்து திருவாரூர் மாவட்டம் தொன்டியக்காடு வரை கடற்கரையோரத்தில் அலையாத்தி காடுகள் அமைந்துள்ளன. இந்த காட்டில் அலையாத்தி மரம், கன்னாமரம், தில்லை மரங்கள் உள்ளன. மேலும் பல வகையான மூலிகை செடிகள், கொடிகள் நிறைந்துள்ளன. புவியியல் அமைப்பில் ஈரப்பதம் அமைந்த பகுதியாக இக்காடுகள் விளங்குவதாலும் பறவைகளின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறும் காடுகள் அமைந்துள்ளன.

எனவே சைபீரியா, மத்திய ஆசியா, ரஷ்யாவின் வடபகுதி, ஐரோப்பா, இலங்கை, மலேசியா, நைஜீரியா, நேபாளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பூநாரை, செங்கால் நாரை, கூழைக்கிடா, அறிவாள் மூக்கான், துடுப்பு வாயான் என 50க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வந்துள்ளன. இப்பறவைகள் மார்ச் மாதம் வரை தங்கும். மே லும் கடல் ஓரத்தில் மீன்கள் மற்றும் இறால்கள், நண்டுகள் உணவாகின்றன. அதிராம்பட்டினம் அலையாத்தி காடுகளில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நன்றி:தினகரன்
Unknown

Unknown

Related Posts:

2 கருத்துகள்:

  1. //பூநாரை, செங்கால் நாரை, கூழைக்கிடா, அறிவாள் மூக்கான், துடுப்பு வாயான்//

    இவற்றைப் படம் போட்டுக் காட்டினால் நல்லது.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.