Breaking News
recent

தஞ்சை மாவட்டத்தில் பொருளாதார கணக்கெடுப்பு பணி தொடக்கம்!

தஞ்சை மாவட்டத்தில் 6–வது பொருளாதார கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. இதில் 2,370 கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


தஞ்சை மாவட்டத்தில் 6–வது பொருளாதார கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. இதனை தஞ்சை மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கலெக்டர் வீட்டில் களப்பணியாளர், மேற்பார்வையாளர்கள் படிவங்களில் விவரங்களை சேகரித்தனர்.

அப்போது தஞ்சை தாசில்தார் முருகதாஸ், நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், புள்ளியியல் துணை இயக்குனரும், உதவி மாவட்ட பொருளாதார கணக்கெடுப்பு உதவி ஆணையருமான கண்ணு ஆகியோர் உடன் இருந்தனர்.


பின்னர் மாவட்ட புள்ளியியல் துணை இயக்குனர் கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:–

மத்திய அரசின் வழிகாட்டுதலுடன் மாநில அரசினால் 5 ஆண்டுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் பொருளாதார கணக்கெடுப்பு பணி தஞ்சை மாவட்டத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் இக்கணக்கெடுப்பு பணி பொருள், இயல் மற்றும் புள்ளியல் துறையால் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

பல்வேறு வகையான உற்பத்தி, வினியோகம், விற்பனை மற்றும் சேவை நிறுவனங்கள் பற்றிய கணக்கெடுப்பான இந்த பணி ஏற்கனவே 5 முறை நடத்தப்பட்டு உள்ளது. 2013–ம் மே மாதத்தில் தொடங்கி ஜூன் மாதம் இறுதிக்குள் இந்த பணி முடிக்கப்பட உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 1,580 கணக்கெடுப்பாளர்கள், 790 மேற்பார்வையாளர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதனை வட்ட அளவில் தாசில்தார்களும், நகராட்சிகளில் நகராட்சி ஆணையர்களும் பொறுப்பு அலுவலர்களாக இருந்து நடத்த உள்ளனர். அரசின் திட்டமிடலுக்கு அடிப்படையாக உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இந்த கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு தருவதும், விவரங்கள் அளிப்பதும் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.