Breaking News
recent

அதிராம்பட்டினம் பகுதியில் வனத்துறை கிளை அலுவலகம் அமைக்க வேண்டும்!

அதிராம்பட்டினம் பகுதியில் வனத்துறை கிளை அலுவலகம் அமைக்க வேண்டுமென அலையாத்தி காடுகள் பாதுகாப்பு சங்க தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சை, திருவாரூர் மாவட்ட கடலோரங்களில் அலையாத்தி காடுகள் உள்ளன. எப்போதும் பசுமை மாறாமலும், பறவையினங்களுக்கு தேவையான மீன்கள், மிருகங்களுக்கு தேவையான இரைகள் உள்ளிட்டவை இங்கு தட்டுப்பாடின்றி கிடைக்கும். அலை யாத்தி காடுகளில் நரி, காட்டு பன்றி, மயில்கள், காட்டு முயல்கள், காட்டு பூனை ஆகியவை அதிகளவில் காணப்படுகிறது. அத்துடன் சீசனுக்காக அலையாத்தி காடுகளுக்கு வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் வந்து செல்கின்றன. தற்போது அதிராம்பட்டினம் அலையாத்தி காடுகளுக்கு வெளிநாட்டு பறவைகள் வர துவங்கிவிட்டது. 
இங்கு வரும் வெளி நாட்டு பறவைகள் அதிராம்பட்டினத்தை சுற்றியுள்ள ஏரிகள் மற்றும் வயல் பகுதிகளுக்கு உணவுக்காக செல்வதுண்டு.
அதிராம்பட்டினம் பகுதிக்கு ஒரே ஒரு வன ஊழியர் மட்டும் தான் உள் ளார். பறவைகளை பாது காக்க கூடுதல் வன ஊழியர் நியமித்து அதிராம்பட்டினம் பகுதியில் வனத் துறை கிளை அலுவலகம் அமைத்து காடுகள், வனவிலங்குகள், வெளிநாட்டு மற்றும் இமயமலை பகுதிகளிலிருந்து வரும் பறவை களை பாதுகாக்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலையாத்தி காடுகள் பாதுகாப்பு சங்க தலைவர் சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.